பக்கம்:அறிவியல் அகராதி.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pla

333

pla


plague - பிளேக்: எலிபரவு கொள்ளை நோய். இந்நோயை உண்டாக்குவது எர்சினியா சூடோ டியூபர்குளொசிஸ் சின்பெஸ்டிஸ் என்னும் நுண்ணுயிரி. குச்சியத் தைச் சுமந்து சென்று நோயைப் பரப்புவது எலி. இந்நோய் இப்பொழுது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. (உயி)

plagiotropism - குறுக்குவாட்டு நாட்டம்: தூண்டல் வினைநோக்கி அமையும் தாவர வளர்ச்சி. காட்டாகப் பக்கக் கிளைகளும் வேர்களும் ஈர்ப்புத் தூண்டலின் சாய் கோணம் நோக்கி அமைதல். ஒ . Orthotropism. (உயி)

Planck constant - பினாங்கு மாறிலி: h. ஒர் அடிப்படை மாறிலி. தன் அதிர்வெண்ணுக்கு ஒளியன் (போட்டான்) கொண்டு செல்லும் ஆற்றல் தகவு. கதிர் வீச்சுச் சிப்பக் கொள்கையில் அடிப்படைத் தொடர்பு W= hw. (இய)

planet-கோள்: பொதுவாகக் கதிரவனைச் சுற்றிவரும் விண்பொருள். அறியப்பட்டுள்ள கோள்கள் 9, எ-டு. புவி, செவ்வாய், வெள்ளி (வானி),

plankton - மிதப்பிகள்: பெரும் பாலும் நுண்ணுயிரிகள். ஒளி மிதப்பிகள், விலங்கு மதிப்பிகள் என இருவகைப்படும். இவை மீன்களுக்கு உணவு. (உயி)

plant - தாவரம்: ஓரிடத்திலேயே இடம் பெயராமல் நிலைத்திருக்கும் உயிரி. எளிய கனிமப் பொருள்களிலிருந்து தன் உணவைத் தானே தயாரித்துக் கொள்வது. இது பலவகைப்படும். ஒ. animal. (உயி)

plant breeding, techniques of - தாவரக்கலப்பு நுணுக்கங்கள்: முதன்மையான நுணுக்கங்கள் பின்வருமாறு. 1. தேர்ந்தெடுத்தல் 2. உட்பெருக்கம். 3. கலப்பின மாக்கல் 4. தாவர அறிமுகம். 5. பெற்றோர் கலப்புப் பெருக்கம் 6. பன்மயம், 7. சடுதி மாற்றம் (உயி)

plant societies - தாவரக்கூட்டங்கள்: வேறுபட்ட சூழல்களில் வாழும் தாவரத் தொகுதிகள். இவை மூன்று வகைப்படும். 1. நீர்வாழ்விகள், 2. வளநில வாழ்விகள். 3. வறண்ட நில வாழ்விகள். (உயி)

plant tissue - தாவரத்திசு: ஒத்த அமைப்பு, தோற்றம், வேலை ஆகியவற்றைக் கொண்ட உயிரணுக்களின் தொகுதியே திசு. (உயி)

planula - தட்டைஇளரி: குழிக் குடலிகளின் வேற்றிளரி. சிறியது. குற்றிழை உள்ளது. தடையின்றி நீந்துவது. தகுந்த இடத்தை அடைவது. குழாய் உடலியாக வளர்வது. பா. larva (உயி)

plasma - கனிமம்: 1. அணுக்கள் இல்லாத குருதியின் பாய்மப் பகுதி 2. தடையிலா மின் அணுக்களும் அயனிகளும் சேர்ந்த கலவை. வெப்ப அணுக்கருவினைகளில் உண்டாவது, பொருளின் நான்காம் நிலை, 3. சில முன்