பக்கம்:அறிவியல் அகராதி.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



pod

337

pol


நுரையீரல் வீக்கம். தொற்று நோய். (உயி)

pod, legume - பருப்புக்கனி: இரு புற வெடிகனிஉளுந்து, துவரை. (உயி)

point - 1.புள்ளி: ஒரு புள்ளியில் அழுத்தம் 2.நிலை: உருகுநிலை. 3. வரை : வெப்பநிலைமானியில் கீழ்த்திட்ட வரை, மேல் திட்ட வரை. 4. முனை: ஒரு முனையி லிருந்து மற்றொரு முனைக்குச் செல்லுதல். 5. இடம்: தராசில் திரும்புமிடம், நிலையிடம். (ப.து)

point, resting - நிலையிடம்: சீராக்கப்பட்டபின் அளவு கோலின் முன்பாகக் குறிமுள் இங்குமங்கும் அசைந்து இறுதியாக நிலைபெறுமிடம் (இய)

point, turning - திரும்புமிடம்: குறிமுள் அளவுகோலில் நகர்ந்து, ஒவ்வொரு பக்கமும் சிறிது தொலைவு சென்று திரும்பும். இவ்வாறு திரும்புமிடங்கள் திரும்பு புள்ளிகள். (இய)

point (true), zero resting - உண்மை நிலையிடம், சுழி நிலையிடம்: தட்டுகள் இரண்டும் வெறுமையாக இருக்கும் பொழுது காணப்படும் நிலையிடம். (இய)

poison - நஞ்சு: வினையூக்கிச் செயலை அழிக்கும் பொருள். (உயி)

poisoning-நச்சுககலப்பு: உணவுப் பொருள்களில் நஞ்சு சேர்தல், வேதிப்பொருள்கள் மூலமோ விழுந்து இறக்கும் உயிரிகள் மூலமோ உண்டாவது. இவ்வுணவை உட்கொள்ளும் பொழுது உயிருக்கு ஊறு ஏற்படும். உணவில் நச்சுக்கலப்பு பற்றிய செய்திகள் அடிக்கடிச் செய்தித்தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. (உயி)

posture - நேர்நிலை: இஃது உடலின் இருக்கை நிலையைக் குறிக்கும். இதனைக் காப்பது இயக்குத்தசைகளான எலும்புத் தசைகள். நிற்றல், நடத்தல், உட்காருதல், ஓடுதல் முதலிய எல்லா நிலைகளையும் கட்டுப்படுத்துவது இயக்குத்தசைகளே. எடுப்பான தோற்றத்திற்கு இது இன்றியமையாதது. (உயி)

polar bond - முனைப்பிணைப்பு: இது ஒர் இணைப்பிணைப்பு. இதில் பிணையும் மின்னணுக்கள் இரு அணுக்களுக்கிடையே சம மாகப் பகிர்ந்து கொள்ளப்படு வதில்லை. (வேதி)

polarizability - முனைப்படுதிறன்: எளிதாக மின்னணு முகில் முனைப்படுதல். அயனிகளில் எதிர் மின்னேற்றத்திலோ அளவிலோ உயர்வு இருக்குமானால், முனைப்படுதிறனிலும் உயர்வு இருக்கும். (இய)

polarization - முனைப்படுதல்: குறுக்கலையில் அதிர்வுகள் கட்டுப்படுத்தப்படுவதால், ஒரு தளத்திலேயே அதிர்வு தோன்று தல். காட்டாக, மின்காந்தக் கதிர்வீச்சு, குறுக்கலை இயக்கமே

அஅ 22