பக்கம்:அறிவியல் அகராதி.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pol

338

pol


2. ஓல்டா மின்கலத்தில் ஏற்படும் குறை. இதில் துத்தநாகத்திலிருந்து வெளியாகும் நீர்வளிக் குமிழிகள் செப்புத்தகட்டில் குவிகின்றன. இதனால் கம்பிவழியாகச் செல்லும் மின்னோட்டம் தடைப்படுதல். இதைப்போக்க உயிர்வளி அளிக்கக்கூடிய முனைப்படு நீக்கியைப் பயன்படுத்த வேண்டும். உயிர்வளி, நீர்வளியோடு சேரும்பொழுது நீர் உண்டாகும். எ-டு. மாங்கனீஸ் ஆக்சைடு. (இய)

polarized light - முனைப்படு ஒளி: புலவரை ஒளி. இதில் மின் புலமும் காந்தப்புலமும் ஒற்றைத் தளங்களுக்கு வரையறை செய்யப்படுகின்றன. புல ஒளியாக்கி (போலராய்டு) மூலம் இந்த ஒளியை உண்டாக்கலாம். (இய)

polonium - பொலோனியம்: கதிரியக்கத் தனிமம். யுரேனியத் தாதுக்களில் சிறிதளவுள்ளது. இதற்கு 30க்கு மேற்பட்ட ஓரிமங்கள் (ஐசோடோப்புகள்) உண்டு. எல்லாம் ஆல்பா துகள்களை உமிழ்பவை. செயற்கை நிலாக்களில் மின்வெப்ப ஆற்றல் ஊற்றாகப் பொ-210 பயன்படுகிறது. (வேதி)

pollen - மகரந்தத்துாள்: பூக்குந் தாவரங்களின் நுண் சிதலகத்திலிருந்து விடுபடும் சிதல் போன்ற பகுதி. 2 அல்லது 3 உயிரணுக்கள் கொண்டது. இதை மகரந்தமணி என்றும் கூறலாம். மகரந்தச் சேர்க்கை முறைக்கேற்றவாறு, மகரந்தமணிகள் தகைவு பெற்றுள்ளன. பூச்சிகளால் கொண்டு செல்லப்படுபவை. ஒட்டுத்தன்மை கொண்டவை. காற்றினால் மகரந்தச் சேர்க்கை அடைபவை. இலேசான மகரந்தத்தூளை உண்டாக்குபவை. ஒவ்வொரு மணியிலும் ஆண் பாலணுக்கள் உண்டு. இவை ஆண்பாலணுத் தாவரத் தலை முறையினைக் குறிப்பவை. (உயி)

pollen sac - மகரந்தத்தூள்பை: மகரந்தத்தூள் பூக்குந்தாவரங்களில் காணப்படுவது. இப்பைகள் மகரந்தப்பையை உண்டாக்குகின்றன. (உயி)

pollen tube - மகரந்தக்குழல்: மகரந்தச் சுவரின் குழாய்ப்புற வளர்ச்சி. இதன் வழியே பாலணுக்கள் சூலுக்குள் செல்கின்றன. (உயி)

pollex - முதல்விரல்: நான்குகால் விலங்குகளின் முன் புறத்துறுப்புகளின் முன்விரல். மனிதனிடம் இது கட்டைவிரல். (உயி)

pollination - மகரந்தச்சேர்க்கை: மகரந்தப்பையிலுள்ள மகரந்தத்தூள், சூல்முடியை அடைதலுக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். இந்நிகழ்ச்சி கருவுறுதலுக்கு முந்தியது. (உயி)

pollution - மாசாதல்: மனிதச் செயல்களால் இயற்கைச் சூழலின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றம். (உயி)