பக்கம்:அறிவியல் அகராதி.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pot

342

pot


படுவது. இதன் உப்புகள் உரங்கள். (வேதி)

potassium bromide - பொட்டாசியம் புரோமைடு: KBr. புரோமின் சேர்ந்த சூடான எரி சோடாக் கரைசலை நிறைவுற்ற தாக்கிப் பெறும் வெண்ணிறப் படிகம். கரைசலை உலர்த்தி மீண்டும் வீட்டுக்கரியுடன் சூடாக்கப் புரோமேட்டு புரோமைடாக ஒடுங்கும். வலித்தணிப்பி. புகைப்படக்கலையில் பயன்படுவது. (வேதி)

potassium chlorate - பொட்டாசியம் குளோரேட்டு: KCIO3. நேர்த்தியான வெண்ணிறக்குச்சிகள். சூடான அடர் பொட்டாசியம் அய்டிராக்சைடு கரைசல் வழியே குளோரின் வளியைச் செலுத்தக் கிடைக்கும். ஆக்சிஜன் ஏற்றி. தீப்பெட்டிகள் செய்யவும் வாணவேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுவது. (வேதி)

potassium cyanide - பொட்டாசியம் சயனைடு: KCN. வெண்ணிறப் படிகம். கொடியநஞ்சு. அதிகம் நீர் கொள்ளக்கூடியது. நீரில் கரைவது. மின்முலாம் பூசவும் பொன்னையும் வெள்ளி யையும் பிரிக்கவும் பயன்படுவது. (வேதி)

potassium di (bi) chromate - இரு குரோமேட்: K2Cr2O7. கிச்சிலிச் சிவப்புப் படிகம். ஆக்சிஜன் ஏற்றி. தவிரச் சாயத் தொழில் உற்பத்தியிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுதல். (வேதி)

potassium hydroxide - பொட்டாசியம் அய்டிராக்சைடு:KOH எரிபொட்டாஷ், நீர், கரி ஈராக்சைடு ஈர்க்கும். வெண்ணிறப் பொருள். பொட்டாசியம் குளோரைடு கரைசலை மின்னாற் பகுக்கக் கிடைக்கும். மென் குளியல் சவர்க்காரங்கள் செய்யப் பயன்படுவது. (வேதி)

potassium iodide - பொட்டாசியம் அயோடைடு: Kl. நீரிலும் ஆல்ககாலிலும் கரையக் கூடிய வெண்ணிறப் படிகம். சூடானதும் செறிவு மிக்கதுமான எரி பொட்டாஷ் கரைசலுடன் அயோடினைச் சேர்க்கப் பொட்டாசியம் அயோடேட்டு கிடைக்கும். இதை உலர்த்தி வீட்டுக் கரியுடன் சூடாக்க அயோடேட்டு அயோடைடாகக் குறையும். புகைப்படக்கலையில் பயன்படுவது. (வேதி)

potassium permanganate - பொட்டாசியம் பர்மாங்கனேட்டு: KMNO4. கரிய ஊதாநிற ஊசி வடிவப் படிகம். நீரற்றது. உலோகப் பளபளப்புள்ளது. மாக்னேட்டை மின்பகுளி உயிர் வளி ஏற்றம் செய்யக் கிடைக்கும் தொற்று நீக்கி, உயிர்வளி ஏற்றி. கரிம வேதிஇயலில் பேயர் வினையாக்கி, வேதி)

potassium nitrate - பொட்டாசியம் நைட்ரேட்டு: KNO3. வெடியுப்பு. ஊசி போன்ற படிகம். வெண்ணிறம். நீர் கொள்ளாதது.