பக்கம்:அறிவியல் அகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

pup

352

pyo


தகுந்த இடத்தைத் தேடிக் கிளையில் ஒட்டிக்கொண்டு கம்பளிப்புழு தன்னைச்சுற்றி ஒரு கூடுகட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்ட பின் ஐந்தாவது தடவையாகத் தோலுரிக்கும். உருமாற்றம் கொண்டபின் ஐந்தாவது தடவையாகத் தோலுரித்து உருமாற்றம் நடைபெறுவதால், இப்பருவம் சிறந்தது. எ-டு வண்ணத்துப்பூச்சி, பா. caterpliar (உயி)

pupil - கண்மணி, பாவை: கண்ணின் கருவிழிப்படலத்திலுள்ள துளை, ஒளி உட்செல்வதைக் கட்டப்படுத்துவது. (உயி)

pure line - தூயகால்வழி: ஒன்றுக்கு மற்றொன்று ஒத்தமையும் ஓரகப் பாலணுத் தனி உயிர்கள் தோன்றுதல். இதனால் தூயகால்வழியே தொடர்ந்து உண்டாகும். (உயி)

purification - தூய்மையாக்கல்: தாதுவிலிருந்து பிரித்தெடுத்த உலோகத்தைத் தூய்மைப்படுத் தும் முறை.

purine -பியூரைன். C5H4N4 வெண்ணிறப்படிகம். கரிம நைட்ரஜன் காரம். உயிர்வளியுடன் சேர்ந்து சிறுநீரக்காடியை உண்டாக்கும். அடினைன், குவானைன் முதலிய வேதிப்பொருள்கள் உண்டாகக் கருவாக இருப்பது. (உயி)

pus - சீழ்: மடிந்த வெள்ளணுக்களே சீழ் உடலில் ஏற்படும் புண் அல்லது வெட்டுக்காயத்தில் தீங்குதரும் குச்சியங்கள் நுழையும் பொழுது அவற்றுடன் எதிர்த்துப் போராடி வெள்ளணுக்கள் மடிகின்றன.(உயி)

putrefaction -அழுகல்:புரதப்பொருள் குச்சியங்களினால் சிதைதல், அம்மோனியாவை விடத் தீயமணமுள்ள அமைன்கள் உண்டாகின்றன. (உயி)

PVC, polyvinyl chloride - பிவிசி, பாலி வினைல் குளோரைடு: பிளாஸ்டிக்கு வகைகளில் இது மிகப்பயனுள்ளது. ஆல்ககால், குளோரின் ஆகியவற்றிலிருந்து இது செய்யப்படுகிறது. குழாய்கள், கைப்பைகள், விளையாட்டுப் பொருள்கள். காலணிகள் முதலியவை செய்யப் பயன்படுதல். (வேதி)

pygostyle-வால் எலும்பு: பறவை வாலின் எலும்பு (உயி)

pykmometer -அடர்த்திமானி: நீர்மத்தின் பெருக்கெண்ணையும் அடர்த்தியையும் கண்டறியுங் கருவி.(இய)

pylorus-குடல்வாய்: இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது. (உயி)

pyorrhoea பற்சீழ்வடிவு: பல்லீறுகளும் குழிகளும் நோய்க்குள்ளாதல். இதனால் பல்லில் சீழ்வடிந்து