பக்கம்:அறிவியல் அகராதி.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

qua

355

qua


லின் திட்டமான அளவு. ஒளியன் (போட்டான்) மின்காந்தக் கதிர்வீச்சின் சிப்பம் ஆகும். (இய)

quantum electro dynamics - சிப்ப மின் இயக்கவியல்: சிப்ப விசை இயல் நோக்கில் மின்னேற்றப் பொருளோடு மின் காந்தக் கதிர்வீச்சு எவ்வாறு வினைப்படுகிறது என்பதையும் மின்காந்தக் கதிர்வீச்சுப் பண்பு களையும் ஆராயுந்துறை. (இய)

quantum jump -சிப்பத்தாவல்: ஒரு சிப்பநிலையிலிருந்து மற்றொரு சிப்பநிலைக்கு ஒரு தொகுதியில் ஏற்படும் மாற்றம். எ-டு அணு அல்லது மூலக்கூறு. (இய)

quantum mechanics -சிப்ப விசை இயல்: சிப்பக் கொள்கையிலிருந்து உருவான விசை இயல். மூலக்கூறுகள், அணுக்கள் ஆகியவற்றின் பண்புகளை விளக்கப் பயன்படுவது. (இய)

quantum number -சிப்ப எண்: சிப்பநிலை அளவுக்குட்பட்ட ஆற்றல்.கோண உந்தம் முதலியவற்றின் மதிப்பைக் குறிக்கும் எண். (இய) quantum state-சிப்ப நிலை: எண்களால் விளக்கமுறும் சிப்பத் தொகுதியின் நிலை. (இய)

quantum statistics-சிப்பப் புள்ளி இயல்: மரபுவழி வரிசை இயலை விடச் சிறப்பு வரிசை இயலின் விதிகளுக்குட்படும் துகள் தொகுதியினைப் புள்ளி இயல் நிலையில் ஆராயுந்துறை. (இய)

quantum theory -சிப்பக் கொள்கை: 1900இல் மாக்ஸ்பிளாங் (1858-1947) என்பார் வகுத்த கொள்கை, வெப்பப் பொருள்களிலிருந்து கரும்பொருள் கதிர்வீச்சு வெளியாவதை இது விளக்குகிறது. இக்கொள்கைப்படி ஆற்றல் சிப்பங்களாக வெளிப் படுகிறது. ஒவ்வொரு சிப்பமும் hvக்கு சமமான ஆற்றலைக் கொண்டுள்ளது. h- பிளாங் மாறிலி. v-கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. கதிர்வீச்சு அதிர்வெண் பிளாங் மாறிலி. (x-கதிர்வீச்சு அதிர்வெண்) இக்கொள்கை தற்காலக் கொள் கையான சிப்பவிசை இயல் தோன்ற வழிவகுத்தது. பொரு ளுக்கும் கதிர்வீச்சுக்குமிடையே நடைபெறும் வினையினை இது ஆராய்கிறது. மேலும், இது மாக்ஸ்வெல் மின்காந்தக் கொள்கை, வழிவழி விசைஇயல் ஆகியவற்றை விளக்குகிறது. (இய),

quantum well laser - சிப்ப இலேசர் கிணறு: வேறுபட்ட நெறிமுறையில் இயங்குவது. அரைக்கடத்தி வேற்றக அமைப் பில் சிப்பவரையறைக் கடத்தல், வரிசை நிலைகளுக்கிடையே இலேசர் வினை தோன்றுவது.

quarantine -தொற்றுத் தடுப்பு: ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் தேவை இல்லாத