பக்கம்:அறிவியல் அகராதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

art

34

ast


முட்டுக்குழியின் முன்பகுதிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி. (உயி)

artificial gold - செயற்கைப்பொன்: மஞ்சள் மாநிறத்துள். நீரில் கரையாது. காரச் சல்பைடுகளில் கரையும். போலிப் பொன்முலாம் பூசப் பயன்படுவது. (வேதி)

artificial insemination - செயற்கை விந்தேற்றம்: செயற்கை முறையில் விந்தினைப் பெண் கருப்பையில் செலுத்துதல். உயர்வகைக் கலப்பு விலங்குகளை உண்டாக்க இம்முறை பயன்படுவது. எ-டு. கறவை மாடுகள். (உயி)

artificial kidney - செயற்கைச் சிறுநீரகம்: குருதியினைத் தூய்மை செய்யச் சிறுநீரகத்தின் வேலையைச் செய்யுங் கருவி. (உயி)

Aryabhatta - ஆரியபட்டா: சோவியத்து உதவியுடன் இந்தியா ஏவிய முதல் செயற்கை நிலா. ஒ. Bhaskara. (வா.வெ.அறி)

asafoetida - பெருங்காயம்: பென்னல் குடும்பத் தாவரத்திலிருந்து பெறப்படும் பிசின். நரம்புக் கோளாறுக்குரிய மருந்துகளில் பயன்படுவது. சமையற்கலையில் நறுமணப் பொருளாகவும் பயன்படுவது. (உயி)

asbestos - கல்நார்: கூரை, குழாய் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

ascaris - நாக்குப் பூச்சி: குடலில் வாழும் வட்டப் புழு. (உயிர்)

ascites - நீர்ப்பெருவயிறு: உட்சூழ்படலக் குழியில் நீர்மம் திரண்டிருத்தல். cirrhosis. (மரு)

asexual reproduction - பாலிலா இனப்பெருக்கம். பா. reproduction. (உயி)

asphalt - கீல்காரை: ஒட்டக்கூடிய அரைக்கெட்டிப் பொருள். கறுத்த மாநிறம் கொண்டது. வண்ணங்களிலும் பூச்செண்ணெய்களிலும் பயன்படுவது. (வேதி)

asphyxia - மூச்சுத்திணறல்: மூச்சு நிற்றல். பலவகைப்படும். (மரு)

asprin - ஆஸ்பிரின்: அசெட்டைல் சாலிசிலிகக் காடி, உடல் வலிநீக்கி. (வேதி)

assimilation - தன்வயமாதல்: செரித்த உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுத் திசுக்களாக மாறுதல். இது வளர்மாற்றம். (உயி)

asteroids, planetoids, minor planets - சிறுகோள்கள்: இவை செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையே காணப்படுபவை. வானவெளித்துருவிகள் இவற்றை நன்கு ஆராய்ந்துள்ளன. வானவெளிப் பயணத்திற்குத் தடையாய் இருப்பவை. (வானி)

asthma - ஈளை நோய்: மூச்சுத் திணறலோடு மூச்சு விடுதல். மூச்சு வலிப்பினால் வெளிமுச்சிலும் தொல்லை இருக்கும். (மரு)

astigmatism - குவியாப் பார்வை: கண் குறைபாடு, வில்லை மூலம் ஒளிக் கதிர்கள் ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு ஒரே சமயத்தில் குவியாத நிலை.