பக்கம்:அறிவியல் அகராதி.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rad

360

rai


அதிர்வெண்களின் மின்காந்தக் கதிர்வீச்சை அளக்கவும் கண்டறியவும் பயன்படும் தொலை நோக்கி. (இய)

radiotherapy - கதிரியல் பண்டுவம்: எக்ஸ் கதிர் முதலியவை அடங்கிய கதிர்வீச்சினால் நோய்நீக்க, மருத்துவத்தில் பயன்படும் முறை. (உயி)

radio wave - வானொலி அலை: கதிரலை. ஒரு கடத்தியில் மின்னோட்டத்தைத் திருப்பி உண்டாக்கப் பயன்படும் மின்காந்த அலை. ஒலி பரப்பிலும் ஒளிபரப்பிலும் பயன்படுவது. ஒரு நொடியில் 300,000,000 மீட்டர் விரைவில் செல்வது (3 x 108 மீ) இதை அனுப்ப ஊடகம் தேவையில்லை. (இய)

radio window - கதிரியல் சாரணம்: வானொலி அதிர்வெண்ணிலுள்ள மின்காந்த நிறமாலைப் பகுதி. (இய)

radium - ரேடியம்: Ra. வெண்ணிறக் கதிரியக்கத்தனிமம். 1898இல் கியூரி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றுடன் விரைந்து உயிர்வளி ஏற்றம் அடைவது. நீருடன் சேர்ந்து நீர்வளியைக் கொடுப்பது. உலோகக் கலவைகள், வானொலிக் குழாய்கள், ஒளிமின்கலம் முதலியவை செய்யப் பயன்படுவது. (வேதி)

radius - ஆரம்: ஒரு வட்டத்தின் மையப்புள்ளிக்கும் அதன் வெளிக் கோட்டிற்குமுள்ள குறுகிய தொலைவு. 2. ஆர எலும்பு: முன் கையிலுள்ள இரு எலும்புகளில சிறியது. (ப.து)

radius of curvature - வளை வாரம்:பா. concave mirror. (இய)

radius of gyration - சுழற்சி ஆரம்: திண்பொருள் ஒரு நிலையான அச்சைப் பற்றிச் சுழலும்போது, சுழற்சி அச்சுக்கும் பொருளின் நிறைமுழுதும் செறிந்ததாகத் தோன்றும் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு சுழற்சி ஆரம் ஆகும். (இய)

radon -ரேடான்: Rn. சுழித் தொகுதியினைச் சார்ந்த கதிரியக்கத் தனிமம். நிறமற்ற ஓரணுவுள்ள (மானோ ஆட்டாமிக்) வளிநிறைத்தனிமம். ரேடியம் சிதைவதால் உண்டாவது. கதிர் வீச்சுப் பண்டுவத்தில் பயன்படுவது. (இய)

radula - அராவுநாக்கு: தோட்ட நத்தையின் நாக்கு. இதில் குறுக்கு வரிசைப் பற்கள் நிறைய உள்ளன. வாளமைப்பைக் கொடுப்பதால், இலைகளைத் தூள் செய்யப் பயன்படுதல். (உயி)

rainbow - வானவில்: நீர்த்துளிகளில் ஒளியின் முழுஅக மறிப்பினாலும் விலகலாலும் நிறப் பிரிகையாலும் கதிரவனுக்கு எதிராகக் காலை அல்லது மாலையில் விண்ணில் உண்டாகும் ஏழு வண்ண விளைவு அல்லது நிறமாலை. தரையிலிருந்து பார்க்கப் பெரிய அரை வட்டம். விண்ணிலிருந்து நோக்க