பக்கம்:அறிவியல் அகராதி.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

red

364

ref


red blood corpuscles, RBCS - சிவப்புக்குருதியணுக்கள்: மென்மையான மேற்பரப்பும் தட்டு வடிவமும் கொண்டவை. ஈமோகுளோபின் என்னும் இரும் பூட்டம் இதில் உள்ளது. குருதியில் ஒரு கனமில்லி மீட்டருக்கு 5 மில்லியன் உள்ளவை. உயிர் வளியைக் கொண்டு செல்பவை. (உயி)

rectifier - திருத்தி: ஒருதிசையில் மட்டுமே அதிக அளவு மின்னோட்டத்தைச் செல்லவிடும் கருவியமைப்பு. (இய)

red lead - ஈயச் செந்தூரம்: ஒளிர்வான மாநிறத்துள். கண்ணாடித் தொழிலில் நிறமியாகவும் உயிர்வளி ஏற்றம் செய்யும் பொருளாகவும் பயன்படுதல். (வேதி)

redox chain - ஏற்ற இறக்கத் தொடர்: உயிர்வளி ஏற்ற இறக்க முறை. (வேதி)

reducing agent - ஒடுக்கு காரணி: ஒடுக்கி. மற்ற பொருள்களில் ஒடுக்கலை உண்டாக்கும் பொருள். (வேதி)

reduction - ஒடுக்கல் , இறக்கம்: வறுக்கப்பட்ட தாது (துத்தநாக ஆக்சைடு) தூள் கல்கரியுடன் சேர்ந்து சூடாக்கப்படுகிறது. இப்போது கல்கரி துத்தநாக ஆக்சைடைத் துத்தமாகக் குறைக்கிறது. உயிர்வளி நீங்குகிறது. இங்குக் கல்கரி ஒடுக்கி.

துத்தநாக ஆக்சைடு + கரி

துத்தநாகம் + கார்பன் மோனாக்சைடு

ZnO + C
ZN + CO

பொதுவாக, இச்செயலில் ஒரு சேர்மத்திலிருந்து உயிர்வளி நீங்குகிறது அல்லது நீர்வளி அதனோடு சேர்கிறது. (வேதி)

reduction division - ஒடுங்கல் பிரிவு: குன்றல் பிரிவின் முதல் பிரிவு இதில் முதல் நிலை, நடுநிலை, பிரிநிலை ஆகியவை அடங்கும். இதனால் உட்கருக்கதிரின் ஒவ்வொரு முனையிலும் சேரும் நிறப்புரிகள் ஒருமயமாக (ஒற்றைப்படையாக) இருக்கும். (உயி)

refining - தூய்மையாக்கல்: 1. ஒரு பொருளிலிருந்து மாசுகளை நீக்கல் (உலோகப் பிரிப்பு 2. கலவையிலிருந்து ஒரு பொருளைப் பிரித்தல். (வேதி)

reflecting telescope - மறிப்புத் தொலைநோக்கி: தொலை நோக்கியில் ஒருவகை. (இய)

reflection, laws of - ஒளிமறித்தல் விதிகள்: படுகதிர் செங்குத்துக்கோடு மறிப்புக் கதி ஆகிய மூன்றும ஒரே சமதளத்தில இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் மறிப்புக் கதிரும் இருக்கும். 2. படுகோணம் மறிப்புக் கோணத்திற்குச் சமம். மறிப்பு எதிரொளிப்பு. (இய)

reflector - மறிப்பி: ஒளி, ஒலி முதலிய வீச்சாற்றலை மறிக்குங் கருவி. (இய)