பக்கம்:அறிவியல் அகராதி.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ref

365

ref


reflex - மறிவினை: இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, முளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.

reforming - சீராக்கல்: நேர்த் தொடர் அய்டிரோ கார்பன்களை வளையச் சேர்மமாக்குதல். பிளாட்டின வினையூக்கியைப் பயன்படுத்தி அதிக அழுத்தத்தில் பண்படா எண்ணெயை வெப்பப்படுத்தி இவ்வினையை நிகழ்த்தலாம். எ-டு மீத்தைல் பென்சினை கெப்டேனிலிருந்து உற்பத்தி செய்தல், நீராவிச் சுழல் தோற்ற மும் (ஸ்டீம் ரிபார்மிங் உண்டு. (வேதி)

refracting telescope - ஒளிவிலகு தொலைநோக்கி: தொலைநோக்கியில் ஒருவகை.(இய)

refraction, laws of - ஒளிவிலகல் விதிகள்: 1. படுகதிர், செங்குத்துக் கோடு, விலகுகதிர் ஆகிய மூன்றும் ஒரே சமதளத்தில் இருக்கும். செங்குத்துக்கோட்டுக்கு எதிர்ப்புறத்தில் படுகதிரும் விலகுகதிரும் இருக்கும். 2. படு கோணத்தின் சைனும் விலகு கோணத்தின் சைனும் எப்பொழுதும் மாறாவீதத்திலிருக்கும். வீதம் ஊடகங்களின் ஒளி நிறத்தைப் பொறுத்தது. (இய)

refraction of sound - ஒலிவிலகல்: ஒலிஅலைகளின் முகப்பு வளைந்து செல்வதற்கு ஒலி விலகல் என்று பெயர். வெவ்வேறு அடர்த்தியுள்ள இரு ஊடகங்களைப் பிரிக்கும் தளத்தை ஒலி அலைகள் கடக்கும் போது, இவ்விலகல் ஏற்படுகிறது. இந்நிகழ்ச்சி ஏற்படக்காரணங்கள்: 1. ஒலி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லுதல் 2. காற்றுவீசல் 3. வேறுபட்ட காற்றுவெப்பநிலை. (இய)

refraction index - ஒளிவிலகல் எண்: ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது, படுகோணத்தின் சைனுக்கும் விலகுகோணத்தின் சைனுக்குமுள்ள வீதமே விலகல் எண். சில பொருள்களின் விலகல் எண்: கிரெளன் கண்ணாடி 153. பனிக்கட்டி 131. வைரம் 2.417. (இய)


refractivity - ஒளிவிலகுதிறன்: தன் மேற்பரப்பில் நுழையும் ஒளிக் கதிரைத் திரிபடையச் செய்யும் ஊடகத்தின் அளவு. (இய)

refractometer - ஒளிவிலகல் எண்மானி: ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணைக் கண்டறியப் பயன்படுங் கருவி. (இய)

refractory - விலக்கி: 1. தூண்டல்,நோய் முதலியவற்றிற்குத் தடையாக இருப்பது. 2. உயர்வெப்ப நிலைக்குத் தடையாக இருக்கும் பொருள். உலைகளின் சுவர்கள் கட்டப் பயன்படுங் கற்கள் முதலியவை. எ-டு தீக்களிமண், டோலமைட்டு, பாக்சைட்டு. (ப.து)

refrigerant - குளிரூட்டி: குளிர்