பக்கம்:அறிவியல் அகராதி.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ref

367

REMS


1905இல் சிறப்புக்கொள்கை உருவாக்கப்பட்டது. அது முடுக்கம் பெறாநிலைகளைச் சார்ந்தது.அதன் சுருக்கம். E=mc2 E-ஆற்றல்,m- பொருண்மை,C-ஒளிவிரைவு).1915இல் பொதுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதில் முடுக்கம் பெற்ற தொகுதிகளைச் சேர்த்ததினால், ஈர்ப்பாற்றலை அவர் பகுத்தறிய முடிந்தது. அவர் விண்ணகத்தை நாற்பருமக் கால இடத் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இதில் ஈர்ப்புப் புலத்தை உண்டாக்குமளவுக்குப் பொருண்மை, இடத்தை வளைக்கிறது. நியூட்டனும் ஐன்ஸ்டினும் ஈர்ப்பாற்றலுக்குத் தந்துள்ள விளக்கங்களிலுள்ள சிறுவேறுபாடுகளும், அவர்தம் இரு கொள்கைகளையும் ஆய்ந்து பார்க்க அறவியலாருக்கு ஒரு வழிவகுத்தன. காட்டாக, நியூட்டன் விசை இயல்படி புதன் என்னும் கோளின் இயக்கம் முரண்பட்டது. ஆனால், இதை ஐன்ஸ்டின் சார்புக் கொள்கை தெளிவாக விளக்குகிறது. அவர் முன்னரே உணர்ந்தவாறு, கதிரவன் அருகே செல்லும் ஒளிக்கதிர்கள், அதன் ஈர்ப்புப் புலத்தால் வளைகின்றன என்பது ஆய்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிரவன் மறைவின் போது செய்த ஆய்வுகள் இதைப் பண்பளவில் உறுதிசெய்துள்ளன. ஆகப் பொதுக்கொள்கை என்பது நடைமுறைக் கொள்கைகளில் ஒன்று. அந்நடைமுறைக் கொள்கைகளின் பலகருத்துக்கள் இக்கொள்கைக்குப் பொதுவாய் அமைந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பு. எவ்வகை ஆய்வுமின்றித் தம் உய்த்துணர்வினால் மட்டுமே இவர் இக்கொள்கையை உருவாக்கியது மேலும் ஒரு தனிச்சிறப்பு. அறிவியல் வரலாற்றில் இக்கொள்கை ஓர் எல்லைக்கல் ஆகும். (இய)

relay-இடைமாற்றீடு : வலுக்குறை மின்னோட்டத்தினால் வலுமிகு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துங்கருவி. தாமியங்கு கருவிகளிலும் உயர்த்திகளிலும் பயன்படுதல்.

rem-ரெம் : அலகுச்சொல். மனித உடலில் கதிரியக்க விளைவுகளை அளக்கும் அலகு (இய)

REM, rapid eye movement-ரெம் : விரைந்த கண் அசைவு, உறக்கத்தில் நடைபெறுவது.

REMS, rare earth magnets-ரெம்கள் : அரும் புவிக்காந்தங்கள். இவை மிகச் சிறியவை. ஆற்றல் உள்ளவை. பாதுகாப்புத் துறை, வானவெளித் துறை, மருத்துவம், உந்திகள், கொக்கிகள் ஆகியவற்றில் பயன்படுவது. ஜம்ஷெட்பூர் தேசிய உலோகவியல் ஆய்வகம் இவற்றைப் புதிய முறையில் உருவாக்க வழி கண்டுள்ளது. (1995)