பக்கம்:அறிவியல் அகராதி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ast

35

ato


கதிர்கள் கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் செல்லும். (இய)

astronaut - வானவெளி வலவர்: வானவெளி வீரர், வீராங்கனை. ஒ. aeronaut.

astronautics - வானவெளி வலவியல்: வானவெளிப்பயணம் பற்றி ஆராயும் துறை. ஒ. aeronautics.

astronomical unit - வானியல் அலகு: கதிரவனுக்கும் புவிக்கும் உள்ள சராசரித் தொலைவு. கதிரவன் மண்டலத்திற்குள் அளவைகளை அளக்க வானியலில் தொலைஅலகாக உள்ளது. தோராயமாக அது 1.496 x 1011 மீட்டர் ஆகும். (இய)

astronomy - வானியல்: கதிரவன், கோள், விண்மீன் முதலிய வானப் பொருள்களை ஆராயுந்துறை. (இய)

astro-particle - வானவெளித் துகள். (வா.அறி)

astrophysics - வான இயற்பியல்: விண்வெளிப் பொருள்களின் இயல்பையும் அவற்றால் காற்று வெளியில் நடைபெறும் நிகழ்ச்சி களையும் ஆராயும் வானியல் சார்ந்த துறை. (இய)

atlas - பிடர் எலும்பு: முதுகெலும்பின் முதல் எலும்பு. தலை எலும்புக் கூட்டைத் தாங்குவது.(உயி)

atmospheric noise - காற்றுவெளி இரைச்சல்: காற்றுவெளித் தடையினால் வானொலி ஏற்பில் உண்டாகும் இரைச்சல் (இய)

atmospheric pressure - காற்றுவெளி அழுத்தம்: 760 மிமீ பாதரச கம்பத்தைத் தாங்குவது. எஸ்.ஐ. அலகு 101325 பாஸ்கல்கள். (இய)

atmospherics - மின்வெளியேற்றங்கள்: இவை காற்று வெளியில் உண்டாகி வானொலிப் பெறுவிகளில் கரமுரா என்னும் இரைச்சலை உண்டாக்கவல்லவை. (இய)

atoll - பவளத் தீவு: வட்டவடிவப் பவழ மலைத் தொடர். மைய உப்பங்கழிகளைச் சார்ந்திருப்பது. (பு.அறி)

atom - அணு: ஒரு தனிமத்தின் மிகச்சிறிய பகுதி. இதனை மேலும் எளிதாகப் பிளக்க இயலாது. வேதி வினையில் ஈடுபடுவது. இதிலுள்ள கரு அளப்பரிய ஆற்றல் நிறைந்தது. இதில் மூன்று துகள்கள் உள்ளன. 1. முன்னணு (புரோட்டான்) 2. அல்லணு (நியூட்ரான்) 3. மின்னணு (எலக்ட்ரான்). அணுக்கருவிலுள்ள மின்னணுக்களே ஒரு தனிமத்தின் வேதிவினையை உறுதி செய்கின்றன. ஒரு தனிமத்திற்கு இரண்டிற்கு மேற்பட்ட ஒரிமங்கள் (ஐசோடோப்ஸ்) உண்டு. (இய)

atom bomb - அணுக்குண்டு: அணுக்கருப்போர்க்கருவி. மிகப் பரந்த அழிவினை உண்டாக்குவது. கட்டுப்படுத்த இயலாத அணுக்கருப் பிளவினால் வெடிப்பு ஏற்படுவது. இஃது உருவாக ஐன்ஸ்டின் கொள்கை