பக்கம்:அறிவியல் அகராதி.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

rep

369

res


அடிப்படை முறை. பொதுவாக, இது இருவகைப்படும். 1.பாலினப்பெருக்கம்: கலவி இனப்பெருக்கம், 2. பாலிலா இனப்பெருக்கம்: கலவியிலா இனப்பெருக்கம்.

reptilia-ஊர்வன: நிலத்தில் வாழும் முதுகெலும்பிகள், மாறு வெப்பநிலை விலங்குகள். உடல் புறத்தோல் செதில்களால் மூடப்பட்டிருக்கும். ஊர்பவை. எ.டு பாம்பு, முதலை, ஆமை, ஓணான், பல்லி (உயி)

resin-பிசியன்: கூம்புத்தாவரங்கள் முதலியவற்றில் காணப்படும் காடிப்பொருள் தொகுதியில் ஒன்று. கற்பூரத்தைலம். (உயி)

resistance-தடுப்பாற்றல்: 1. நோய்த் தொற்றிகளுக்கும் ஒட்டுண்ணிகளுக்கும் எதிராக ஏற்படும் ஆற்றல். 2. நோய்க் கொல்லிகளின் நச்சு விளைவுகளைத் தாக்குப்பிடிக்கும் திறன். பா. (உயி)

resolution-பகுத்தல்: ஓரகச் சீரிகளாக (ஐசோமர்கள்) ஒளிகுறை சேர்மத்தைப் பிரித்தல். (வேதி)

resolving power-பகுப்புத்திறன்: அருகிலுள்ள பொருள்களின் தனித்தனி உருக்களைத் தோற்றுவிக்கும் ஒளிக்கருவியின் திறமையளவு (இய)

resonance and tuning - ஒத்ததிர்வும் அதிர்வியையும்: வானொலிச் செலுத்தி அல்லது பெறுவியைக் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இயங்கச் செய்வதற்கு அதிர் வியைபு (டியூனிங்) என்று பெயர். அதாவது, அதற்குக் குறிப்பிட்ட அதிர்வெண்ணிற்கேற்ப , ஒத்ததிர்வு (ரெசொனன்ஸ்) ஏற்படுமாறு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வானொலிப் பெட்டியிலும் அதிர்வியைவுப் பகுதி ஒன்றுண்டு. இதற்கு மின்நிலைமமும் (இண்டக்டன்ஸ்) குறிப்பிட்ட அளவுண்டு. ஒரு மாறுமின்னேற்பி இதனோடு தொடராகவோ பக்கமாகவோ இணைக்கப்பட்டிருக்கும். கம்பிச்சுருளின் மின்நிலைமம் நிலையானது. மின்னேற்பியின் ஏற்புத்திறன் மாறக் கூடியது. தேவைப்படும் நிலையத்திலிருந்து வரும் அலைகளுக்கேற்ப, மின்னேற்பியில் தகுதி வாய்ந்த ஏற்புத்திறனை அடையும் பொழுது, மின்சார ஒத்ததிர்வு ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் ஒரு வாய்பாடு மூலம் குறிப்பிடலாம்.

f- அதிர்வெண் L-மின்நிலைமம், C - ஏற்புத்திறன்

பல்வேறு அலைகள், அலை வாங்கியை அடைந்து மின் தூண்டலை ஏற்படுத்தினாலும், நமக்கு வேண்டிய ஒரே ஒரு நிலையத்தின் அதிர்வை மட்டும் பெற இயலும். பின் இந்த அலையானது படிகத்தினால்

அஅ 24