பக்கம்:அறிவியல் அகராதி.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ret

371

rhe


அமைந்திருக்கும். பா. venation (உயி)

retina-விழித்திரை: விழியின் மூன்று திரைகளில் ஒன்று. உணர் கண்ணறைகள் கொண்டது. உரு உண்டாகும் நரம்புத்திரை. (உயி)

retort-வாலை: நீர்மத்தைக் காய்ச்சி வடிக்கும் கருவியமைப்பு. (வேதி)

retrogression-பின்னடைவு: ஒரு விலங்கு தன் வளர்ச்சியில் பின்னோக்கிச் செல்லுதல், (உயி)

reverberation-எதிர்முழக்கம்: ஓர் அறையில் உண்டாக்கப்படும் வன்னொலி அலைகள் சுவர்களில் மோதி மீண்டும் குறைந்த வீச்சுடைய அலைகளாக ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்போரின் காதை அடையும். இறுதியாக இவை வலுவிழந்து கேட்க இயலாத அளவுக்கு மாறும். இந்நிலையில் அறையில் பேசுவதைப் புரிந்து கொள்ள இயலாது. இதுவே எதிர்முழக்கம். இசையரங்குகளிலும திரையரங்குகளிலும் ஓரளவுக்கு இந்நிலை இருந்தால், ஒலி இனிமை இருக்கும். (இய)

reverberatory furnace-எதிர் வெப்ப உலை: தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் உலை. வேதி)

reversible change-மீள்மாற்றம்: ஒரு தொகுதியின் அழுத்தம், பருமன் முதலிய பண்புகளில் ஏற்படும் மாற்றம். இதில் மாற்றம் முழுவதும் நடுநிலையில் தொகுதி இருக்கும். (வேதி)

reversible reaction-மீள்மாறுவினை: முதல்நிலையிலிருந்து மாறுநிலைக்கும் மாறுநிலையிலிருந்து முதல் நிலைக்கும் உட்படும் வேதிவினை. எ-டு நைட்ரஜன்+ அய்டிரஜன் → அம்மோனியா.

N2 + 3H2 → 2NH3 (வேதி)

reversion-மீள்தோன்றல்: பல தலைமுறைகளுக்குப் பின் மூதாதைப் பண்புகள் கால்வழியில் மீண்டும் ஏற்படுதல். (உயி)

rhenium-ரீனியம்: Re அரிய மாறுநிலை உலோகம். காற்றில் உயிர்வளி ஏற்றத்திற்குச் சிறிது தடை அளிப்பது. வெப்ப இரட்டைகள் செய்யப் பயன் படுதல். தவிர, உலோகக் கலவைகளிலும் பயன்படுவது.(வேதி)

rheostat-மின்தடைமாற்றி: இது மின்தடையின் அளவைத் தேவைக்கேற்ப மாற்றியமைக்குங் கருவி. மின் கடத்தாப் பொருளால் செய்யப்பட்ட ஓர் உருளையின் மீது மெல்லிய நிக்ரோம் கம்பி ஒழுங்காகச் சுற்றப்பட்டிருக்கும். ஒரு முனை நிலையான மின்தொடர்பு கொண்டது. கம்பிச் சுருளில் தேவையான இடத்தில் இணைப்பு கொள்ள வழுக்கி ஒன்றுள்ளது. ஆதலால், தடையாகப் பயன்படுத்தப்படும் கம்பியில் எவ்விடத்திலும் மற்றொரு இணைப்பை உருவாக்க இயலும். எனவே, தடை