பக்கம்:அறிவியல் அகராதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ato

36

atr


காரணமாக இருந்தது. முதல் அணுக் குண்டு 1945 ஆகஸ்டு 6 இல் ஜப்பானிலுள்ள ஈரோசிமாவில் போடப்பட்டது. அமெரிக்கா, உருசியா ஆகிய இருவல்லரசுகளிடம் அணுக்குண்டுகள் அதிகம் உள்ளன. பா. atomic reactor (இய)

atomicity - அணுக்கட்டெண்: அணுக்கள்சேர்ந்து மூலக்கூறுகள் உண்டாகின்றன. ஒரு தனிமத்தின் ஒரு மூலக்கூறில் இருக்கும் அணுக்களின் எண்ணிக்கை அத்தனிமத்தின் அணுக்கட்டெண் எனப்படும். இதிலிருந்து ஒரு தனிமத்தின் மூலக்கூறு வாய்பாட்டை எழுத இயலும் அவோ கடரோவின் கருதுகோளைப் பயன்படுத்தி நீர்வளி, உயிர்வளி, குளோரின் முதலிய பொதுவளிகளின் அணுக்கட்டெண்களைக் கணக்கிடலாம். (இய)

atomic clock - அணுக்கடிகாரம்: மிகத்துல்லியமான கடிகை. அணுக்கள், மூலக்கூறுகள் ஆகியவற்றின் அதிர்வுகளிலிருந்து கால அளவு அடிப்படை அமைந்துள்ளது. (இய)

atomic energy - அணுவாற்றல்: பா. nuclear energy. (இய)

atomic heat - அணு வெப்பம்: ஒரு தனிமத்தின் வெப்ப எண், அணு எடை ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை.(இய)

atomic nucleus - அணுக்கரு: பா. atom. (இய)

atomic physics, nuclear physics - அணு இயற்பியல்: அணுவின் இயல்புகளை ஆராயுந்துறை. (இய)

atomic reactor - அணு உலை: அணுக்கள் பிரிவுறும் உலை. இதில் மின்னணுக்களின் எண்ணிக்கை கூடாமலும் குறையாமலும் இருக்கத் தகுந்த அமைப்புள்ளது. எளிதில் பிளவுறக்கூடிய யுரேனியம் -235 அணு ஆற்றலைப் பெற இது பயன்படுகிறது. இதில் உள்ள கரிக் கோல்கள் தொடரியக்கத்தைக் கட்டுப்படுத்துபவை. இவற்றை வெளியே இழுக்கத் தொடரியக்கம் அதிகமாகும். உள்ளே தள்ளக் குறையும். இவ்வடிப்படையிலே அணுக் குண்டு செய்யப்படுகிறது. (இய)

atomic theory - அணுக்கொள்கை: இது ஒரு கருதுகோள். ஒரே தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒன்று போல இருப்பவை என்பது கருத்து. பா. Dalton's atomic theory. (இய)

atomic volume - அணுப்பருமன்: திண்ம நிலையிலுள்ள ஒரு கிராம் அணு அடைத்துக்கொள்ளும் பருமன். அணுப்பருமன் = அணுஎடை அடர்த்தி. (இய)

atomic weight - அணு எடை: இது ஒரு தனிமத்தின் ஓர் அணு வின் எடைக்கும் 1/12 பங்கு கரி 12 ஒரிமத்தின் எடைக்குமுள்ள வீதமாகும். (இய)

atropine - அட்ரோபைன்: C17H23NO3 ஒரு காரமம் (ஆல்கலாய்டு). நிறமற்றது. படிகமற்றது.