பக்கம்:அறிவியல் அகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sarn

379

sat


samarium - சமாரியம்: Sm. வெள்ளி நிறத்தனிமம். ஏனைய லாந்தனாய்டுகளுடன் சேர்ந்துள்ளது. உலோகவியல், கண்ணாடித் தொழில் அணுத் தொழில் ஆகியவற்றில் பயன்படுவது. (வேதி)

sandwich compound - இடையீட்டுச்சேர்மம்: இத்தொகுதியில் மாறுநிலைத் தனிமத்தின் ஓர் அணு, இரு ஒரு போக்கு பென்சீன் வளையங்களோடு சேர்க்கப்படுகிறது. எ-டு பெரோசீனும் அதன் ஒப்புருக்களும் (அனலாக்ஸ்). (வேதி)

sap - சாறு: உயிர்ப்பான பாய்மம். கனிமங்களும் சர்க்கரையும் சேர்ந்தது. மரவியக் குழாய்களிலும் (சைலம்) பட்டையக் குழாய்களிலும் (புளோயம்) நுண் குமிழியிலும் காணப்படுவது. (உயி)

sapling - நாற்று: நட்டுப் பயிரிடுவதற்காக நாற்றங்காலில் வளர்க்கப்படுவது. (உயி)

saponification - சவர்க்காரமாதல்: இஃது ஒரு வேதிவினை. இதில் எஸ்தர் நீராற் பகுக்கப்பட்டு அய்டிராக்சைடாக மாறுகின்றது. (வேதி)

sapphire - நீலமணிக்கல்: ஒளி ஊடுருவக்கூடிய நீலமான குருந்தக்கல்லின் (AI2O3) இயற்கைப் படிகவடிவம். கொபால்ட்டும் மற்ற உலோகங்களும் சிறிதளவு இருப்பதால் நீல நிறம் பெற்றுள்ளது. விலை உயர்ந்த கல். (வேதி)

saprophyte - சாறுண்ணி: மட்குப்பொருளில் வாழ்கின்ற உயிரி - நாய்க்குடை பூஞ்சணம். ஒ. parasite.(உயிரி)

sapwood, albumum - சாற்றுக்கட்டை: உள்பட்டைக்கும் வைரக் கட்டைக்கும் இடையிலுள்ள பகுதி, மரவியத்தின் (சைலம்) மென்மையான வெளிப்புறப் பகுதி, பா. wood (உயி)

sarcolemma - தசைப்படலம்: குறுக்குவரித்தசை இழையைச் சூழ்ந்துள்ள மெலிந்த படலம். (உயி)

sarcology - தசைஇயல்: தசைப் பகுதிகளின் உள்ளமைப்பை ஆராயுந்துறை. (உயி)

sarcoplasm - தசைக்கணியம்: தசை இழைகளிலுள்ள முன் கணியம். (உயி)

saser - sound amplifiction by stimulated emission of radiation - சேசர்: உயரிய ஒலியமைப்புக் கருவி. (1997) ஒ. laser, maser. (இய‌)

satellite - துணைக்கோள்: துணை நிலா. இது இயற்கைநிலா, செயற்கைநிலா என இருவகைப்படும். திங்கள் புவியின் இயற்கைநிலா. புவி முதலிய கோள்களை வலம் வருபவை செயற்கை நிலாக்கள். பணியின் அடிப்படையில் அவை முக்கியமாக மூன்று வகைப்படும்.

1. செய்தித்தொடர்பு நிலாக்கள்: