பக்கம்:அறிவியல் அகராதி.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sca

381

sch


கொதிகலன்களில் நீரைக் காய்ச்சும்பொழுது, கரைந்துள்ள கார்பனேட்டு கரையாக்கார்பனேட்டாகக் கொதிகலன்களில் அடியில் சேறுபோன்று படிகிறது. இவ்வாறே பிற மாசுகளும் படிகின்றன. விளைவுகள்: செதில் அரிதல் கடத்தி. ஆகவே, எரி பொருள் செலவு. 2. கலன் உருகல். 3. கலனைச் செதில் அரித்தல். போக்க வழி: கடின நீரைத் தகுந்த வழியில் மாற்றல். (இய)

scandium - ஸ்கேண்டியம்: Sc. இலேசான எடையுள்ள தனிமம். 800க்கு மேற்பட்ட கனிமங்களில் சிறிதளவுள்ளது. மீச்செறிவு ஒளிகளில் பயன்படுவது. (வேதி)

scanning - அலகிடுதல், வரி வரைவு செய்தல்: மின்னணுத் துப்பாக்கியிலிருந்து வரும் மின்னணுக்கதிர்கள் இடவலமாகவும் மேலுங்கீழாகவும் படத்தின் மீது விழுகின்றன. இந்நிகழ்ச்சி அலகிடுதலாகும். (இய)

scanning microscope - அலகிடும் வட்டு, வர வரைவுத்தட்டு: இதனை நிப்காவு என்பார் 1884இல் கண்டறிந்தார். உருவினைப் பல இணைக் கூறுகளாக இது பிரிக்கிறது. இதன் வேலையை இப்பொழுது எதிர்மின் கதிர்க்குழாய் செய்கிறது. (இய)

scanning microscope - அலகிடும் நுண்ணோக்கி. (இய)

scapula - தோள்பட்டை எலும்பு: தோள் வளையத்திலுள்ள இரு எலும்புகளில் ஒன்று. மற்றொன்று கழுத்துப் பட்டை எலும்பு. (உயி)

scattering - சிதறல்: பருப்பொருள் வழியாகச் செல்லும்பொழுது ஒரு கதிர்வீச்சுச் சுற்றைப் பரவுதல். முதல் திசையில் செல்லும் ஆற்றலைக் குறைப்பது. இது மூன்று செயல்களின் சேர்க்கையாக அமையலாம். ஒளிமறிப்பு, உட்கவரல், விளிம்பு வளைவு. (இய)

scavenger - தோட்டி: இறந்த‌ விலங்குகளையும் மட்கும் பொருள்களையும் கழிவுகளையும் உண்ணும் விலங்கு. இதனால் துப்புரவு வேலை நடைபெறுகிறது. எ-டு பன்றி, காகம், ஓநாய். (உயி)

Schiff's base - ஷிஃப் காரம்: நறுமண‌ அமைனுக்கும் ஆல்டிகைடுக்கும் இடையே நடைபெறும் குறுக்கல் வினையினால் தோன்றுங் கூட்டுப்பொருள். (வேதி)

Schiffs reagent - ஷிஃப் வினையாக்கி: ஆல்டிகைடுகளையும் கீட்டோன்களையுங் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள். (வேதி)

schizocarp - பல்பிளவுறுகனி: இது ஒரு வெடிகனி, வழக்கமாக, இதில் இரண்டிற்கு மேற்பட்ட சூலக இலைகள் இருக்கும். இவ்விலைகள் சிறுகனிகளாகப் பிளவுறுகின்றன. ஒவ்வொரு சிறு கனியிலும் ஒருவிதை இருக்கும். ஆமணக்கில் கனி உறைதெறித்து