பக்கம்:அறிவியல் அகராதி.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sch

382

sci


விதை வெளிவரும். எ-டு துத்தி, கொத்துமல்லி. (உயி)

schizophyta - பிளவுறுதாவரங்கள்: பிளவுறல் மூலமே பெருகுந் தாவரங்கள். எ-டு குச்சியங்கள், நீலப் பசும்பாசிகள். (உயி)

Schultz's solution - சுல்லட் கரைசல்: பொட்டாசியம் அயோடைடும் துத்த குளோரைடும் அயோடினும் சேர்ந்த கரைசல். செல்லுலோசை ஆய்ந்தறியப் பயன்படுவது. (வேதி)

science - அறிவியல்: இயற்கையின் இயல்பை ஆராயுந்துறை. முறையான அறிவுள்ள துறை அனைத்தும் அறிவியலே. இது இயற்கை அறிவியல்கள், உயிரியல் அறிவியல்கள், சமூக அறிவியல்கள் என மூன்று வகைப்படும். முதல் வகையில் இயற்பியல், வேதியியல் முதலியனவும் இரண்டாம் வகையில் விலங்கியல், தாவரவியல் முதலியனவும் மூன்றாம் வகையில் சமூக அறிவியல், உளவியல் முதலியனவும் அடங்கும். உற்நோக்கலும் ஆய்வுகளும் அறிவியலுக்கு அடிப்படையானவை. அறிவியல் முறை அதனை வளர்ப்பது. அறிவியல் பயிற்சியினால் உண்டாவது அறிவியல் மனப்பான்மை அல்லது பார்வை. (பது)

scientific method - அறிவியல் முறை: அறிவியல் சிக்கலுக்குத் தீர்வு காணும் முறை. இதில் சிக்கல்கள் இனமறியப்பட்டு அவற்றிற்குரிய தகவல்கள் திரட்டப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தற்காலிக முடிவு மேற்கொள்ளப்படுகிறது. இது கருதுகோள் ஆகும். உற்று நோக்கல் ஆய்வுகள் மூலம், இம்முடிவு சரியாக்கப்பட்டு இறுதியாக விதி அல்லது கொள்கையாக வகுக்கப் படுகின்றது. ஒரு சிக்கலுக்குத் தீர்வு காண இம்முறை எல்லாத் துறைகளிலும் பயன்படுகிறது. (பது)

scion - ஒட்டு: ஒரு தாவரத்திலிருந்து பிரிக்கப்படும் மொட்டு அல்லது தண்டகம் (தண்டு + இலை). இது அரும்புதல் அல்லது ஒட்டுதல் மூலம் புதிய தாவரமாக வளரவல்லது. எ-டு எலுமிச்சை, மா. (உயி)

scierenchyma - கடுந்திசு: வந்திசு. இது ஒருவகை நிலைத்திசு. இதன் உயிரணுச்சுவர்கள் தடிமனாக முன்கணியம் பயன்படுவதால், இதன் அணுக்கள் உயிரற்றவை. இதில் நார்த்திசுவும் கல்லனுக்களும் உள்ளன. இவை தாவரங்களுக்கு வலுவளிக்க வல்லவை. இத்திசுவிற்குக் கடினத்தன்மை இருப்பதால் இதனை கடுமம் எனலாம். (உயி)

scierotic coat - விழிவெளிப் படலம்: கண்ணில் மூன்று போர்வைகள் உள்ளன. அவற்றில் முதல்போர்வை இவ்வெளிப் படலமாகும். ஏனைய இரண்டு விழியடிக் கரும்படலம், விழித் திரை. இது கடினமான போர்வை. ஆகவே, இதைக்கடும்