பக்கம்:அறிவியல் அகராதி.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sem

387

ser


குழலிகள்: விரையில் நேர்த்தியாகச் சுருண்டு அமைந்துள்ள குழலிகள். இவற்றில் வித்தணுக்கள் உண்டாகின்றன. மனிதனிடம் ஒவ்வொன்றும் 15 மி.மீ குறுக்களவும் 50 செமீ நீளமும் உள்ளது. விந்துகுழலில் விந்தணுவை இது சேர்க்கிறது. (உயி)

semipermeable membrane - அரைகுறை ஊடுருவு படலம்: சில மூலக்கூறுகளை மட்டும் தன் வழியே செல்ல விடும் படலம், எ-டு செல்லோபேன்தாள். (இய)

senescence - மூப்படைவு: வயது ஆக ஆக உள்ளமும் உடலும் இயல்பாக மாற்றம் அடைதல். (உயி)

sensation - புலனுணர்தல்: ஒரு புலன் தனக்குப் பொருத்தமான தூண்டலினால் தாக்குறுவதால் உண்டாகும் உடன் உணர்வு. (உயி) -

sense organ - புலன் உறுப்பு: துண்டலுக்குத் துலங்கலை உண்டாக்கும் உறுப்பு ஐம் பொறிகள். பா. ear eye. (உயி)

sentiment - பற்று: ஆள், பொருள் அல்லது கருத்துப்பற்றிய உணர்ச்சிகளின் தொகுப்பு. பொதுவாக, விருப்பு, வெறுப்பு ஆகிய இரண்டையும பற்று உள்ளடக்கியது. சூழ்நிலைப் பட்டறிவிற்கேற்ப உயர்வது. (உயி)

sepal - புல்லி: பூவிதழ்களில் ஒருவகை. பா. petal. (உயி)

sepsis - புரை உண்டாதல்: சீழ் உண்டாக்கும குச்சியங்கள் உடலில் தொற்றி நசிவை ஏற்படுத்துதல். (உயி)

septum - தடுப்பு: பிரிசுவர். இருகுழி அல்லது அறைகளுக்கிடையே உள்ள தடுப்பு. இதயம் மேலறை கீழறையாகவும் இடது அறை வலது அறையாகவும் தடுப்பினால் பிரிக்கப்பட்டிருத்தல். (உயி)

sequestration - அயனிமுடமாதல்: ஒரு கரைசலிலுள்ள அயனியோடு அணைமம் (காம்ப்ளக்ஸ்) தோன்றுவதால், அந்த அயனி தன் இயல்பான செயலை இழத்தல். அயனி முடமாக்கிகள் தீங்கு நீக்கும் பொருள்களே. (வேதி)

series - 1. தொடர் 2 வரிசை: (ப.து)

serous membrane - தெளியப் படலம்: நுரையீரல் குழிகள் முதலியவற்றைக் கரையிடுந்திசு. (உயி)

serrate - பல்விளிம்பு: இலையில் முனைநோக்கி முக்கோனப் பற்கள் அமைந்திருத்தல். எ-டு குப்பைமேனி. (உயி)

serrulate - நுண்பல் விளிம்பு: இலையில் முனைநோக்கி நுண்ணிய பற்கள் அமைந்திருத்தல். (உயி)

serum - தெளியம்: தெளிவான நீர்மப் பாய்மம். அல்லது உறைந்த குருதியிலிருந்து பிரிந்த கணிமம். (ப்ளாஸ்மா). இது வெளிறிய மஞ்சள் நிற நீர்மம்.