பக்கம்:அறிவியல் அகராதி.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ses

388

sex


பைபிரினோஜன் நீங்கியது. மற்ற வகையில் இது அமைப்பில் கணிமத்தை ஒத்தது. ஊட்டச் சத்தையும் எதிர்ப்புப் பொருள்களையும் எதிர்ப்பிகளையும் எடுத்துச் செல்வது. (உயி)

sesamoid bone - எள் வடிவ‌ எலும்பு: சிறிய முட்டை வடிவ எலும்பு, தசை நாணில் உண்டாவது. பா. patella. (உயி)

sessile - இயக்கமற்ற, இடம் பெயராத: கடல் அனிமோன்கள். 2. காம்பற்ற ஓக் இலை. (உயி)

seatae - 1. புள்ளிகள்: வளைய உடலியான மண்புழுவில் இடப்பெயர்ச்சிக்காகப் பயன்படும் பகுதிகள். இயக்கத்தின் பொழுது தரையில் பிடிப்பை உண்டாக்கப் பயன்படுபவை. 2. சிதல்காம்பு: மாசிகளின் சிதல் பயிர்க்காம்பு.

setting - இறுகுதல்: சிமெண்டு என்னும் படிகாரை நீரை உட்கவர்ந்து கெட்டிப் பொருளாதல். இக்காரையினுள்ள சேர்மங்களின் நீரேற்ற வினையும், இவ்வினையைத் தொடர்ந்து கால்சியம் சிலிகேட் சேர்மங்கள் சிதைவடைவதும் இதற்குக் காரணங்களாகும். (வேதி)

sewage - சாய்க்கடை: கழிவுநீர் செல்லும் வழி. நல்ல வாழ் நலத்திற்கு நல்ல சாய்க்கடைத் திட்டம் இன்றியமையாதது. (உயி)

sex- பால்: ஆண், பெண் என்னும் தனி உயிர்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளின் தொகுப்பு. (உயி)

sex appeal - பால் கவர்ச்சி: பொதுவாக, ஆண் பெண்ணைக் கவருந்திறன், விலங்குகளிடத்து இதற்குப் பல அமைப்புகள் உள்ளன. நிறம், மணம், உறுப்பு முதலியவற்றைக் கூறலாம். (உயி)

sex cell - பாலணு: ஆண் அணு (விந்து). பெண் அணு (முட்டை). (உயி)

sex chromosome - பால்நிறப்புரிகள்: இது பாலை ஆனா பெண்ணா என்று உறுதி செய்வது. (உயி)

sex determination - பால் உறுதி செய்தல்: ஒரு சிறப்பினத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக இருக்கும்பொழுது, பால் உறுதி செய்தல் மரபணு வழி அமைந்ததாகும். சில சமயங்களில் ஒற்றை இணை இணைமாற்றுகள் பாலை உறுதி செய்தல். வழக்கமாக முழுநிறப்புரிகளே நிறப்புரிகளே. பாலை உறுதி செய்பவை. (உயி)

sex hormones - பால்தூண்டிகள்: ஆண்ட்ரஜன்களும் ஆஸ்ட்ரஜன்களும். (உயி)

sextant - உயரமானி: அணுக‌ இயலாக் கதிரவன் முதலிய விண் பொருள்களை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

sexual reproduction - பாலினப் பெருக்கம்: ஆண் பெண்ணாகிய