பக்கம்:அறிவியல் அகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

soi

399

sol


மண்ணில் காற்று வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கவேண்டும். அப்பொழுது தான் மண்ணுக்கு உயிர்வளி கிடைக்கும். கரி ஈராக்சைடு வெளியேறும். இதற்குச் சிறந்த முறை புழுதி உழுதல். வேர் வளர்ச்சிக்கும் உயிர்கள் மூச்சு விடவும் மண் காற்று மிக இன்றியமையாதது. (உயி)

soil conservation - மண்வளப் பாதுகாப்பு: மண் அரிப்பைத் தடுத்து, அதன் அமைப்பை நிலைநிறுத்தி, மண் வளத்தைப் பேணுவதற்கு மண் வளப் பாது காப்பு என்று பெயர். இதற்குப் பின்வரும் முறைகளை மேற்கொள்ளலாம். 1. காற்றைத் தடுத்து நிறுத்த மரங்களைப் பயிரிடுதல், 2. நிலங்களைத் தரிசு போடாமல் சாகுபடி செய்தல் 3. மாற்றுப் பயிரிடுதல் 4 அடிக்கடி நீர்ப்பாய்ச்சுதல் 5. எரு அடித்தல். 6. புழுதி உழுதல் 7. எருவிடுதல் 8. பாள முறையில் பயிரிடுதல். (உயி)

soil erosion - மண் அரிப்பு: தீமை தரும் அளவுக்கு மண் அரிக்கப்படுவதை மண் அரிப்பு என்கிறோம். இது இயற்கை அரிப்பு, விரைவு அரிப்பு என இருவகைப்படும். காற்று, நீர், வெப்பம் முதலியவை அரிப்பிற்குரிய காரணிகள். (உயி)

soil reaction - மண்வினை: காடி, காரம், நடுநிலை ஆகிய பண்புகளில் ஏதேனும் ஒன்றை மண்பொருள்கள் மண்ணிற்கு அளிக்கும். இது அப்பொருள்கள் தரும் எச் அயனி, ஓஎச் அயனி ஆகியவற்றைப் பொறுத்தது. பிஎச் 7.0 ஆகவுள்ள கரைசல் நடுநிலைக் கரைசல். 7.14 வரை காரத்தன்மை உயர்வினைக் குறிக்கும். 7-1 வரை காடித் தன்மையின் உயர்வைச் சுட்டும். இவற்றில் இரண்டாவது அதிகமிருக்கும் நிலம் காரநிலம். மூன்றாவது அதிகமிருந்தால் காடிநிலம். (உயி)

soil tired - களைத்த நிலம்: ஒரு நிலத்தில் மாறி மாறிப் பயிர் செய்யப்படுவதால், அதிலுள்ள உப்புகள் தீர்ந்துவிடும். அது, தன்வளத்தை இழக்கும். ஆண்டு தோறும் எருவிடுதல், செயற்கை உரமிடல் ஆகியவற்றினால் இக்களைப்பை நீக்கலாம். (உயி)

soil water - மண்நீர்: இது மூன்று வகைப்படும். 1. புவிஈர்ப்பு நீர்: இது தொடர்ந்து வேர்களுக்குக் கிடைக்க மழை பெய்ய வேண்டும். 2. நுண்துளை ஈர்ப்பு நீர்: இது மண் இடைவெளிகளிலும் மண்துகள்களைச் சூழ்ந்தும் உள்ளது. தாவரங்களுக்குப் பெரிதும் பயன்படுவது. 3. ஈரப்பசை நீர்: நுண்துளை ஈர்ப்பு நீர் நீங்கியபின் உள்ள நீர். (உயி)

solar cells - கதிரவன் மின்கலங்கள்: இவை அரைகுறைக் கடத்திகள் ஆகும். கதிரவன் கதிர்வீச்சுகளை மின்னாற்றலாக மாற்றுபவை. இக்கலங்களில் கதிர்வீச்சுகள் படும்போது,