பக்கம்:அறிவியல் அகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sol

400

sol


அவற்றின் பொலிவுக்கேற்ப மின்னணுக்களும் மின்னோட்டங்களும் உண்டாகின்றன. இவை இரைச்சலையோ கழிவையோ உண்டாக்குவதில்லை. இவற்றிற்கு எரிபொருள்களும் தேவை இல்லை இவற்றில் மின்னியக்கு விசை உண்டாக ஒளிக்கதிர்கள் காரணமாக உள்ளன. சிலிகன் மின்கலங்கள் ஒளிக்கதிர்கள் படும்போதும், செலீனியம் மின்கலங்கள் வெப்பக் கதிர்கள் படும்போதும், வேலை செய்கின்றன. செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுகின்றன. (இய)

solar eclipse - கதிரவன் மறைவு: கதிரவனுக்கும் நிலவுலகிற்கும் நடுவில் திங்கள் இருக்கும். அதன் நிழல் நிலவுலகின் மேல் விழும்பொழுது இம்மறைவு உண்டாகிறது. இது அறிவியல ஆய்விற்கு இடமளிப்பது. (இய)

solar energy- கதிரவன் ஆற்றல்: கதிரவன் ஒர் இயற்கை ஆற்றல் மூலம். அதன் உட்பகுதி மீவெப்பநிலையில் இருக்கும். அணுக்கருச் சேர்க்கை முறையில் ஒவ்வொரு வினாடியும் 4.3 மில்லியன் டன் நிறையுள்ள பொருள் ஆற்றலாக மாறி, 3.8 X 1026 கிலோ வாட் ஆற்றல் உண்டாகிறது. இவ்வாற்றல் மின்காந்தக் கதிர் வீச்சுகளாகத் தொடர்ந்து வெளிப்படுகிறது. இது கதிரவன் மின்கலங்கள், அடுப்புகள் ஆகியவற்றில் பயன்படுகிறது. (இய)

solar heater - கதிரவன் அடுப்பு: கதிரவன் ஆற்றலால் இயங்குவது. குழி ஆடியால் ஒளிமறிக்கப்பட்டு, வெப்பம் பெறப்படுகிறது. கதிரவன் போக்குக்குத் தகுந்தவாறு, வெப்பம் பெற ஆடியை மாற்ற வேண்டும். (இய)

solar system - கதிரவன் மண்டலம்: கதிரவன் ஒரு விண்மீன். இதுவும் இதனைச் சார்ந்த 9 கோள்களும அடங்கிய தொகுதியே கதிரவன் மண்டலம். கோள்களாவன. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, நிலவுலகு, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ. இத்தகைய வான வெளிப் பொருள்களை ஆராயுந்துறை வானவியல் (அஸ்ட்ரானமி) ஆகும்.

solder - பற்றாக: உலோகப் பரப்புகளை இணைக்கப் பயன்படும் உலோகக் கலவை. இது மென்பற்றாசு, கடினப் பற்றாசு, பற்ற வைப்புப் பற்றாசு என மூன்று வகைப்படும். (இய)

soldering iron - பற்றாசுக்கோல்: பற்ற வைக்கும் கருவி. (இய)

solenoid - வரிச்சுற்று: காப்பிட்ட செப்புக் கம்பி ஒன்றை ஒர் உள்ளகத்தின் மேல் அடுத் தடுத்துச் சுற்றுவதாகும். மின் காந்தம் செய்ய இது தேவை. தேனிரும்பை உள்ளகமாகக் கொண்ட வரிச்சுற்றே மின்காந்தம். கம்பிச் சுற்றுகளை அதிகமாக்கல், காந்த வடிவத்தை மாற்றல், மின்னோட்ட வலிமை