பக்கம்:அறிவியல் அகராதி.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

som

402

sou


கண்டம் அல்லது வளையம். (உயி)

somnambulism - துயில்நடை: தானாக இயங்கும் நரம்புத் தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் உறக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்த பின், அவர்களுக்குத் தாம் செய்த செயல்கள் நினைவுக்கு வாரா. சேக்ஷ்பியர் நாடகங்களில் இந் நிலை மாந்தர் வருகின்றனர். (உயி)

sonar - சோனார்: ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச்சொல். இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் ஆகும். இது ஒரு கருவி மட்டுமல்லாது நுணுக்கமும் ஆகும். இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எதிரொலித்தல் முறையில் கண்டறிகிறது. இந்நிகழ்ச்சியில் உயர் அதிர் வெண்ணுள்ள ஒலித்துடிப்பு பொருளுக்கு அனுப்பப்படுகிறது. இது பொருளில் பட்டு எதிரொலித்து மீண்டும் கருவியை அடைகின்றபோது, வழியறிதலும் எல்லை காணலும் ஒரு சேர நடைபெறுகின்றன. துடிப்பு பொருளை அடைந்து மீண்டும் கருவியை அடைய ஆகும் நேரம் பொருளின் ஆழத்தைக் குறிக்கும். (இய)

sonometer - ஒலிமானி: இழுத்துப் பொருத்தப்பட்ட கம்பிகளின் அதிர்வுகளைப் பற்றி அறிய உதவும் கருவி. ஓர் உள்ளீடற்ற பெட்டி, மரத்தாலானது. நீளம் 1.மீ. இதன் ஒரு முனையில் கொக்கியும் மறுமுனையில் கப்பி ஒன்றும் இருக்கும். இவற்றிற்கிடையே முக்கோண வடிவமுள்ள மரத்துண்டுகள் இருக்கும். கொக்கியிலிருந்து இவை வழியே கப்பிமூலம் கம்பி சென்று அதனடியில், தன் முனையில் எடையுடன் தொங்கும். (இய)

sorosis - கூட்டுக்கனி: சொறிக்கனி, பல்திரள்கனி, பூக்கள் நெருங்கியமைந்த பூத் தொகுதி யிலிருந்து உண்டாவது. எல்லாக் கனிகளின் கனி உறைகளும் இணைவதால், இக்கனி பார்ப்பதற்கு ஒரே கனி போன்று பொய்த்தோற்றமளிக்கும். எ-டு பலாப்பழம் , அன்னா சிப்பழம், துனாப்பழம். பா. (உயி)

sorus - சிதல்கொத்து: பெரணியிலுள்ள இனப்பெருக்க உறுப்பு. சிதலகங்களைக் கொண்டது. சிதலகங்கள் சூல் ஒட்டில் இருக்கும். (உயி)

sound - ஒலி: புலன் உணர்வு. காற்று அல்லது ஏனைய‌ ஊடகத்தினால் செலுத்துப்படும் அதிர்வுகள் அடங்கியது ஒலி. இவை மாறி மாறி நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் அமையும். அழுத்த அலை என்று ஒலி கூறப்பெறுவது. இது நெட்டலை வடிவமாகும். இதில் பண்புகளாவன: எடுப்பு, உரப்பு, பண்பு. இதன் விரைவு இதனைச் செலுத்தும் ஊடகத்தைப் பொறுத்தது. காற்றில் 0° செ இல் இதன்