பக்கம்:அறிவியல் அகராதி.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spa

406

spa



திகளும் பயன்படுத்தப்படும். அனைத்துலக அளவில் மேற் கொள்ளப்பட்ட முதல் முயற்சி இது. இதன் கட்டுப்பாடு அமெரிக்காவின் கையில் இருக்கும். இத்திட்டத்தில் ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளும் கலந்து கொள்ளும். இதன் இரு பெரும் நன்மைகள். 1. விரைந்த செயலாக்கம், 2. பயன்கள் அதிகம்.

space research - வானவெளி ஆராய்ச்சி: வானவெளியைப் பல நிலைகளில் ஆராய நடைபெறும் ஆராய்ச்சி. மனிதன் வான வெளிப்பயணத்தை மேற்கொள்ள எடையின்மை முதலிய வான வெளி நிலைமைகளையும் உயிர் வாழ்வதற்கேற்ற கோள் நிலை மைகளையும் முதலில் ஆராய வேண்டும். ஆகவே, இவ் வாராய்ச்சியால் மேற்கூறிய நிலமைகள் உற்றுநோக்கலாலும் ஆய்வாலும் தீர ஆராயப் படுகின்றன. அதற்கு ஏவுகணை களும் செயற்கை நிலாக்களும் பெரிதும் பயன்படுகின்றன. (வா.அ.)

சிறப்புகள்: 1. புதுமைகளையும் புத்தம்புது கண்டுபிடிப்புகளையும் உருவாக்கியுள்ளது. 2. செறிந்த துணுக்கங்களையும் முறைகளையும் எழச் செய்தது. 3. எல்லா வகைச் சிக்கல்களுக்கும் தீர்வு காணும் விடிவெள்ளி. 4. பல அறிவியல் துறைகளும் விரைந்து வளர வாய்ப்பளித்துள்ளது. 5. வானவெளி தன்கு ஆராயப் பெற்றுள்ளது. பல புது உண்மைகள் வெளியாகியுள்ளன. (ப.து.)

space science - வானவெளி அறிவியல்: இயற்பியல், வேதி இயல், உயிரியல், கணக்கு ஆகிய அடிப்படை அறிவியல்களின் அடிப்படையில் உருவாகிய பயனுறு அறிவியலும் தொழில் நுட்ப அறிவியலுமாகும். வானவெளி வெற்றிக்கு இவ்வறிவியலே முதற்காரணமாகும். இதில் வான வெளி இயற்பியல், வேதிஇயல், உயிரியல், மருத்துவம், தொழில் துட்ப இயல் முதலிய துறைகள் அடங்கும்.

spaceship - வான்வெளிக்கப்பல்: குழுப்பயணம் மேற்கொள்ளும் வானவெளிக்கலம், இது மனிதன் செல்வதையே குறிக்கும். (வா.அ.)

space shuttle-வானவெளி ஓடம்: ஏவுகணை போன்று செல்வதும் வானவூர்தி போன்று இறங்குவது மான மிக முன்னேறிய வான வெளிக்கலம். வானவெளி நிலையத்திற்கு மனிதரையும் பொருள் களையும் கொண்டு செல்வது. எ-டு உருசியா பரான், அமெரிக்க எண்டவர். (ப.து.)

space station - வானவெளி நிலையம்: ஆராய்ச்சி மேற் கொண்டு புவியை வலம் வருவது. எ-டு மிர். பா. Mir,

space Suit - வானவெளி உடை: வான வெளி நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க வான வெளி வீரர்கள் அணியும உடுப்பு, புவியிலுள்ள இயல்பான சூழ் நிலைமைகள் வானவெளியில்