பக்கம்:அறிவியல் அகராதி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

spe

409

sph


தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதம். இது ஒரு எண். இது பொருள்களுக்குத் தகுந்த வாறு மாறுபடும். நீரின் வெப்ப எண் 1 செம்பு 094 ஹ்(இய)

specific resistance -மின்தடை எண்: ஒரு மீட்டர் நீளமும் ஒரு சதுர மீட்டர் குறுக்குப் பரப்பு முள்ள உலோகக் கம்பியின் மின்தடை, அதன் மின்தடை எண் ஆகும். (P) (இய)

spectrometer - ஒளிவிலகல் மானி: இது ஒருவகை நிறமாலை நோக்கி, ஒளி விலகல் எண்களைத் துல்லியமாக அளக்கப்பயன்படுவது. எ-டு ஒளி விலகல் எண்: கண்ணாடி 1.5, வைரம் 2.5 2. நிறமாலைமானி: ஒரு ஒளிமூலத்தின் நிறமாலையினைப் பகுத்தறியப் பயன்படுங்கருவி. (இய)

spectroscope - நிறமாலை நோக்கி: நிறமாலையைப் பெறவும் உற்று நோக்கவும் பயன்படுங்கருவி. (இய)

Spectrum -நிறமாலை: இது ஒரு பின்உரு. முப்பட்டகத்தால் உண்டாக்கப்படும் நிற எல்லை. குறிப்பிட்ட நிலைமைகளில் ஓர் உறுப்பினால் உறிஞ்சப்படும் அல்லது உமிழப்படும் மின் காந்தக் கதிர்வீச்சு எல்லை. இது துய நிறமாலை, மாசு நிறமாலை, தொடர்நிறமாலை, வரி நிற மாலை, கதிரவன் நிறமாலை எனப் பலவகைப்படும். (இய)

speculum - நோக்கி: 1. உடலின் குழிகளைக் காணப் பயன்படுங்கருவி, 2. ஆடி 3 பளபளப்பான உலோகத்தால் செய்யப்பட்ட மறிப்பான். (பது.)

speed - விரைவு: ஒரு வினாடியில் பொருள் கடக்கும் தொலைவு. அலகு மீ/வி. விரைவு = கடந்த தொலைவு / எடுத்துக்கொண்ட நேரம். பா. velocity (இய)

speedometer - விரைவுமானி: இயக்கத்தில் இருக்கும் ஒர் ஊர்தியின் விரைவைக் காட்டப் பயன்படுங்கருவி. ஊர்திகளில் பொருத்தப்பட்டிருக்கும். (இய)

sperm, spermatozoan - விந்ததணு: பால் இனப்பெருக்கத்தில் பங்கு பெறும் ஆண் அணு (உயி)

spermatophyta-விதை தாவரங்கள்: உறையிலோ உறையில்லாமலோ விதைகளை வெளிப்படுத்தும் தாவரங்கள். முன்னவை விதையுறைத் தாவரங்கள் (தென்னை). பின்னவை விதையுறை இலாத்தாவரங்கள் (சைக்கஸ்). இரண்டும் பூக்குந்தாவரங்கள். (உயி)

spherometer - கோனமானி: ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியில் படிவது திருகின் கூரிய முனையே. எடுக்கும் அளவுகள் மூலம் வளைவை உறுதி