பக்கம்:அறிவியல் அகராதி.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ste

414

ste


இயக்கும் ஆற்றல். இது பல வகைப்படும். ஈரஆவி ஆவியாகாமல் நீர் இருக்கும்வரை கிடைக்கும் ஆவியில் நீர்த்துளிகள் இருக்கும். இதுவே ஈரஆவி. எல்லா ஆவியும் நீருடன் தொடர்புள்ள வரை ஈரஆவியே. 2. உலர்ஆவி: ஈரஆவியை உலர்த்த இது கிடைக்கும். நீர் முழுவதும் நீங்கியது. 3 மீஉலர் ஆவி: வளி விதிக்குட்பட்ட ஆவி. 4. குறிக்கோள் ஆவி: மீஉயர் வெப்ப நிலையிலுள்ள ஆவி. ஆக, ஈரம் நீங்குவதைப் பொறுத்து ஆவியும் அதன் வகையும் வேறுபடுகின்றன. (இய)

steam engine - நீராவி எந்திரம்: அழுத்தத்தில் ஆவியைப் பயன்படுத்தும் வெப்ப எந்திரம். இதில் வெப்பஆற்றல் எந்திர ஆற்றலாகிறது. இதைக் கண்டறிந்தவர் நியூகோமன். அமைத்தவர் ஜேம்ஸ் வாட்டு. (இய)

steel - எஃகு: இரும்பும் கரியுங் கொண்ட உலோகக் கலவைகளில் ஒன்று. கரி எஃகு, உலோகக் கலவை எஃகு, கறுக்கா எஃகு எனப் பல வகையுண்டு. பெசிமர் உலையில் தயாரிக்கப்படுவது. வில் சுருள்கள், உலோகக் கலவைகள் முதலியவை தயாரிக்கப்பயன்படுவது. (வேதி)

steering-கலத்தைச் செலுத்துதல்: சிற்றுந்தை ஓட்டுவது கப்பலையும் வானூர்தியையும் செலுத்துவது, அவ்வளவு கடினமன்று. ஆனால், வானவெளிக் கலத்தைச் செலுத்துவது என்பது மிகமிகக் கடினமாகும். வழியில் ஏற்படும் திரிபைத் திருத்துவது முன்னதில் எளிது. பின்னதில் அரிது. வான வெளி வலவர் உணரும் முடுக்கங்களும் அவர்தம் நொடி நேரச் செயற்பாடுகளும் கலத்தைச் செலுத்துவதிலுள்ள கடினத்திற்குக் காரணமாகும். ஆகவே, கலத்தைச் செலுத்தப் பொதுவாகப் பயிற்சியும் சிறப்பாக உடற்பயிற்சியும் வலவருக்குத் தேவை. (இய)

stele - மையத்திசு. தாவரத்தண்டு அல்லது வேரிலுள்ள உருளைத் திசு. உட்தோல், சுற்றுவட்டம் ஆகியவற்றைக் கொண்டது. (உயி)

stem - தண்டு: தரைக்கு மேல் வளரும் தாவரப்பகுதி. இலை, இலைக்கோணம், கணுவிடை முதலிய பகுதிகளைக் கொண்டது. ஈர்ப்புக்கு எதிராக வளர்வது. ஒ. root (உயி)

stenopodium - சுருங்குகால்: இரு கிளைக்கால். இதன் புறப்பகுதியும் அகப்பகுதியும் நீண்டும் குறுகியும் இருப்பதால், நடப்பதற்கும் உணவு உண்பதற்கும் பன்படுவது. பா. (உயி) biramous appendage ஒ. pseudopodium.

step - படி: ஒரு வேதிவினையின் தொடக்கநிலை. இதில் ஆற்றல் ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாறலாம். பிணைப்புகள் முறிபடலாம் தோன்றலாம். மின்னணுக்கள் மாற்றப்படலாம். 2. வழி கணக்கு போடுவதில் வழி