பக்கம்:அறிவியல் அகராதி.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

str

417

sty


பேற்றில் காணப்படுபவை (உயி),

striated muscle - வரித்தசை: இயக்குத்தசை, பா. skeletal muscle (உயி)

stridulation -கீச்சொலி எழுப்பல்: கீச்சொலி உண்டாக்கல். ஆண் பூச்சிகள் தரையில் தம் உறுப்புகளைத் தேய்த்து உண்டாக்கும். பாச்சைகள் தம்முன் சிறகுகளைத் தேய்த்து ஒலி ஏற்படுத்துதல். காதலாட்டத்தில் பெண் பூச்சி களைக் கவர இது பெரிதும் உதவுகிறது.

strobila-1.திருகி: நாடாப்புழுவின் வளையத் தொடர். இத்தொடர் இழுது மீனிலும் காணப்படுகிறது. 2.கூம்பு: சிதல் இலைத் தொகுதியும் அதில சிதல்களும் இருத்தல், 3. கதிர்: பெண்பூக்கள் கொண்ட சிதல் கதிர். (உயி)

stroboscope - சுழல்பொருள் நோக்கி : சீரான இயக்கத்துடன் விரைவாகச் சென்று கொண்டிருக்கும் பொருள்களை, அவை நிலையாக இருப்பது போல் பார்க்கும் கருவி (அய).

stroma-அடரி: 1. பசுங்கணிகத்தில் உள்ள துணுக்க அணுக்களுக்கிடையே உள்ள வெண்ணிற அடிப்பொருள். 2. பூஞ்சை நுண்ணிழைகள் தொகுதி.

strontium - ஸ்ட்ரான்ஷியம்:Sr வெண்ணிற உலோகம், இயற்கையில் ஸ்ட்ரான்ஷியனேட்டாகவும் கிடைப்பது. மத்தாப்புத் தொழிலிலும் சர்க்கரையைத் தூய்மைப்படுத்தவும் பயன்படுவது (உயி)

structural formula - அமைப்பு வாய்பாடு: வேதி வாய்பாடு. ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களைக் காட்டுவதோடு கூட, அதன் அமைப்பையும் தெரிவிப்பது. ஆகவே, அது மூலக்கூறு வாய்பாடுமாகும்.

H
|
H--C--H
|
H

இது மீத்தேன் மூலக்கூறு அமைப்பு.

structure - அமைப்பு: ஒரு பொருள் அமையும் வகை மூலக்கூறு அமைப்பு 2. கட்ட மைப்பு: உயிரியின் உடலமைப்பு.கட்டிடத்தின் கட்டுமான அமைப்பு. (பது)

structured programming - கட்டமைப்புக்குட்பட்ட நிகழ்நிர லாக்கம்: திறன் வாய்ந்த கணிப்பொறி நிகழ்நிரல்களை உருவாக்கும் வகை, பா. programme (இய)

style - 1. நடை 2 எழுத்தாணி 3. சூல்தண்டு: சூல் இலையின் காம்புப் பகுதி. சூல்பையையும் சூல்முடியையும் இணைப்பது. (ப.து)

stylus - எழுதுகூர்: 1. சிறிய படிகத்துண்டு. எ-டு வைரம். நறுவலில் (சிப்) பொருந்தியது. வினைல் தட்டிலுள்ள காடிப் பள்ளத்தைத்

அஅ27