பக்கம்:அறிவியல் அகராதி.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

sur

422

swe



அணுக்களை ஆராயும் புதிய அறிவியல், தொழில்நுட்பச் செறி வுள்ளது. 1960களில் உருவான அரைகுறைக் கடத்தி மின் தொழில் இதைத் தோற்று வித்தது. (தொது)

surface tension - பரப்பு இழு விசை: அனைத்துப் பொருள்களிலும் மூலக்கூறுகள் உண்டு. அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே பரப்பு இழு விசை, நீர் மேற்பரப்பு இதில் நீட்டிய மீட்சிப்படலம் போல் இருக்கும். எ-டு நீர்மேல் குண்டுசி மிதத்தல். (இய)

surfactant - பரப்பு இழுவிசைக் குறைப்பி: மேற்பரப்பு இழுவிசையைத் தாழ்த்தும் பொருள். எ-டு. சவர்க்காரம் (இய)

surveying - அளவையிடல்: நிலப் பரப்பைத் துல்லியமாக அளந்து பதிவு செய்தல். இதிலிருந்து படங்களும் திட்டவரைவுகளும் குறிக்கப் படும். சொத்துகளை அளந்து இடங்கண்டறியவும் கட்டடங்களுக்குத் திட்டப்பாடு அமைக்கவும் அளவையிடல் பயன்படுவது. (இய)

suspension - தொங்கல்: ஒரு திண்மத்தின் அல்லது நீர்மத்தின் சிறிய துகள்கள் நீர்மம் அல்லது வளியில் சிதறுதல் ஒ. butter. (வேதி)

suspensor - தாங்கி: தற்காலிகக் காம்பு போன்ற உறுப்பு. கருவுறுதலுக்குப் பின் ஊட்டமுள்ள முளை சூழ்தசையில் கருவைத் தாங்குவது. உறையில் விதையுள்ள தாவரங்கள், பெரணிகள் (செலாஜினெல்லா) உறையில் விதையில்லாத் தாவரங்கள் (சளம் பனை) ஆகியவற்றில் காணப்படுவது. (உயி)

suture - தையல்வாய்: அடுத்தடுத்துள்ள பகுதிகளுக்கிடையே ஏற்படும் சந்திப்பைக் குறிக்கும் கோடு. தலைச்சட்டக எலும்புகளின் இணைவாய்கள், சூல் இலையின் விளிம்புகள் எடுத்துக் காட்டுகள், 2. தையல்: கிழிந்த உடல் உறுப்பைத் தைத்து சேர்த்தல். 3. தையல் பொருள்: நைலான், பட்டு, நூலிழை முதலிய தைப்புப் பொருள்கள். (உயி)

swallowing - உணவு விழுங்கல்: கவளம் கவளமாக உணவு உட் கொள்ளுதல் (உயி)

swarming of bees - தேனீக்கள் கூட்டமாகச் செல்லுதல்: ஒரிடத்தில் தங்கள் கூடுகட்டிய வாழ்க்கை முடிந்த பின் வேறோர் இடத்திற்கு அரசியும் அத்துடனுள்ள மற்றத் தேனிக்களும் புடைசூழச் செல்லுதல். அங்குத் தேன்கூடு கட்டி வாழத் தொடங்குதல். (உயிர்

sweat gland - வியர்த்தல்: 1. வியர்வை வெளியேறல். 2. கொழுப்பகற்றல்: கொழுப்பு நீக்கும் முறைகளில் உண்டாகிய வடிதுண்டிலிருந்து எண்ணெயையும் குறைந்த உருகுநிலை மெழுகுகளையும் அகற்றல் (உயிர்

sweat gland - வியர்வைச்சுரப்பி: சுருண்ட குழாய்ச் சுரப்பி.