பக்கம்:அறிவியல் அகராதி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bab

41

bal


Babo's law - பாபோவின் விதி: ஒரு கரைபொருளை ஒரு நீர்மத்தில் கரைக்க அதன் ஆவியழுத்தம் தாழ்வுறும். அவ்வாறு தாழ்வது அதில் கரைந்த கரைபொருள் அளவுக்கு நேர் வீதத்தில் இருக்கும். (இய)

bacillus - கோலியம்: கோல் வடிவமுள்ள துண்ணுயிரி. இரு பிளவிகள் பேரினத்தைச் சார்ந்தது. பா bacteria (உயி)

backbone - முதுகெலும்பு: இதன் குழாய் போன்ற பகுதியில் தண்டுவடம் உள்ளது. முள்எலும்புகளாலானது. மனித முதுகெலும்பில் 33 முள் எலும்புகள் உள்ளன. (உயி)

back cross - பெற்றோர் கலப்பு, பிற்கலப்பு: ஒரு கலப்பினத்தின் பாலணு. அதன் பெற்றோர் பாலணுக்கள் ஒன்றினால் கருவுறுதல். (உயி)

bacteria - குச்சியங்கள்: குச்சி போன்ற வடிவமுள்ள உயிரிகள். கோல், சுருள், கோளம் ஆகிய முன்று வடிவங்களில் உள்ளவை. ஒற்றைக் கண்ணறைத் தாவரங்கள். பச்சையம் இல்லாததால், ஒட்டுண்ணியாகவும் சாறுண்னியாகவும் வாழ்பவை. (உயி)

bactericide - குச்சியக் கொல்லி. (உயி)

bacteriology - குச்சிய இயல்: நுண்ணியரிகளான குச்சியங்களை ஆராயுந்துறை. பா. microbiology. (உயி)

bacteriolysis . குச்சியக் கலைவு. பா bacteria (உயி)

bacteriophage - குச்சியவுண்ணிகள்: இவை நச்சியங்கள் (வைரஸ்). தம் வால் மூலம் குச்சியத்துடன் இணைந்து தொற்றுவதைத் தொடருகின்றன. இவை குச்சியங்களுக்கு ஒட்டுண்ணிகள் ஆகும். (உயி)

bacteriorhiza - குச்சிய வேரிணை வாழ்வு: வேருக்கும் குச்சியங்களுக்கும் இடையே அமைந்த பிணைப்பு வாழ்வு. வேர் முண்டுகளில் குச்சியங்கள் தங்கித் தங்களுக்கு வேண்டிய ஊட்டத்தைப் பெறுகின்றன. மாறாக, அவை நைட்ரேட் உப்புகளை வேர் முண்டுகளில் உண்டாக்குகின்றன. இவ்வாறு இவை இரண்டும் ஒன்றுக்கு மற்றொன்று உதவி வாழ்கின்றன. (உயி)

Bakelite - பேக்லைட்: தொகுப்பு முறையில் செய்யப்பட்ட முதல் பிளாஸ்டிகப் பொருள்களில் ஒன்று. தொலைபேசி, மின் சொடுக்கிகள், மின்காப்புப் பொருள்கள் முதலியவை செய்யப்பயன்படுவது. (வேதி)

baking soda - சமையல் சோடா: சோடியம் அய்டிரஜன் கார்பனேட். (வேதி)

balance - தராசு, சீரை: ஆய்வகத்தில் பொருள்களை நிறுக்கப் பயன்படுங்கருவி. 0.0000001 கிராம் வரை துல்லியமாக நிறுக்கலாம். இது இயற்பியல் தராசு, வேதித் தராசு என இரு வகைப்