பக்கம்:அறிவியல் அகராதி.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ter

432

tet


அரிப்பது. வேலைப்பங்கீட்டுக் குட்பட்டது. ஒவ்வொருவகையும் ஒரு வேலை செய்யும். தேனீக்கள், எறும்புகள் ஏனைய இரண்டு சமூகப் பூச்சிகள். (உயி)

territory-ஆட்சி எல்லை: உணவு உண்ணல், கூடுகட்டுதல், கலவி நிகழ்த்தல் முதலிய செயல்களுக்காக ஒரு விலங்கு பாதுகாக்கும் இடம் (உயி)

Terylene- டெரிலின்: தொகுப்பிழைகளில் பயன்படும் ஒரு வகைப் பால்யஸ்டரின் வாணிபப் பெயர். (வேதி)

testa- விதைவெளியுறை: விதையின் புறவுறை பா.tegmen. (உயி)

test- சிறுதேர்வு, சிற்றாய்வு: 1. கல்வி மதிப்பீட்டின் இன்றியமையாப் பகுதி. இது புறத்திண்மை வாய்ந் தது. அடைவுத் தேர்வு, குழுத் தேர்வு, பரப்பறி தேர்வு எனப் பல வகைப்படும். 2. ஆய்வகத்தில் முடிவு காணச் செய்யப்படும் சோதனை. இது பெரும்பாலும் குறுகிய நேரம் செய்வதாகவே அமையும். எ.டு சர்க்கரை ஆய்வு (ப.து)

test cross-ஆய்வுக்கலப்பு: ஆய்ந்து பார்ப்பதற்காகச் செய்யப்படுவது. பா. backcross (உயி)

testis, testicle- விரை: ஆண் இனப்பெருக்க உறுப்பு விந்தணுக்கள் இதில் உண்டாகின்றன. (உயி)

test tube baby- ஆய்வுக்குழாய் குழந்தை: முன்பு செயற்கை வித்தேற்றத்தின் மூலம் குழந்தை பிறந்தது. தற்பொழுது ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப் பெற்றுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை. சென்னையில் இந்த ஆய்வு (1991) வெற்றி தரும் வகையில் நடந்துள்ளது. (உயி)

tetanus. இசிவு: தாடைக்கட்டு. கிளாஸ்டிரிடியம் டெட்டனி என்னும் நுண்ணுயிரியினால் உண்டாவது. தசை விறைப்பும் இசிவும் இருக்கும். இந் நுண்ணுயிரி உண்டாக்கும் நச்சு, தண்டு வடத் தைத் தாக்கி இயக்க நரம்புகளுக்குப் பரவும். (உயி)

tetrad - நான்மி: நான்கு எண்ணிக்கை கொண்டது. இணை சேர்தலில் ஒருங்கிணையும் இரு நிறப் புரிகளின் நான்கு நிறப் பொருள்கள். (உயி)

tetraploid-நான்மம்: இது பாலணுவிலுள்ள நிறப்புரிகளின் எண்ணிக்கை. இயல்பான எண்ணிக்கை. 2. இது இருமயம், ஒன்றிருந்தால் ஒருமயம். இங்கு நான்கிருப் பதால் நான்மயம். பல இருந் தால் பன்மயம். பொதுவாக, இயல்பு எண்ணிக்கை (2n) என்றும் இதில் பாதி (n) என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம் (உயி)

tetrapod - நாற்கால் விலங்குகள்: நான்கு கால் அடிகளைக் கொண்டவை. எ-டு முதலை, தவளை, அரிமா. (உயி)

tetrode - நான்முனைவாய்: மும்முனை வாயைக் காட்டிலும் கூடு