பக்கம்:அறிவியல் அகராதி.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



the

434

the


கடத்துதிறன் ஓரலகு வெப்பநிலை வாட்டம் நிலவும்போது, ஓரலகு குறுக்குப் பரப்பின் வழியே ஒரு வினாடியில் ஜூல் அளவில் கடத் தப்படும் வெப்ப ஆற்றல் ஒரு பொருளின் வெப்பங் கடத்து திறனாகும். (இய)

thermionic valve - வெப்ப அயனித் திறப்பி: ஒரு வெற்றிடக் குழாய், இதில் வெப்பமுறு எதிர் மின்வாய் இருக்கும். இதிலிருந்து மின்னணுக்கள் உமிழப்படும். நேர்மின்வாய் இவற்றைத் திரட்டும். இதன் இடத்தை இப்பொ ழுது படிகப்பெருக்கி பிடித் துள்ளது. (இய)

thermister - வெப்ப அயனிக் கடத்தி: ஒர் அரைகுறைக்கடத்தி (இய)

thermochemistry - வெப்ப வேதியியல்: வெப்ப வினைகளை ஆராயுந்துறை. (இய)

thermocouple - வெப்ப மின்னிரட்டை: வெப்ப மின்சார அடிப் படையில் அமைந்த கருவி. வெப்ப நிலைகளை அளக்கப் பயன்படுவது. வேறுபட்ட இரு உலோகக் கம்பிகள் சேர்ந்த இணைப்புகள் வேறான வெப்ப நிலையில் இதில் வைக்கப்படுகின்றன. இப்பொழுது அக்கம்பிகளின் சுற்றில் மின் னோட்டம் நிகழ்கிறது. இந்த அமைப்பே மின்னிரட்டை இதில் ஏற்படும் மின்னோட்டம் வெப்ப மின்னோட்டமாகும். இந்நிகழ்ச்சிக்குச் சீபெக்கு விளைவு என்று பெயர் (இய)

thermodynamics -வெப்ப இயக்கவியல்: வெப்பம் முதலிய ஆற்றல் வடிவங்களையும், வெப்ப நிலை, அழுத்தம், செறிவு முதலிய இயற் பியல் அளவுகளிலுள்ள தொடர் புள்ள மாற்றங்களையும் ஆராயுந் துறை. (இய)

themometer-வெப்பநிலைமானி: கலிலியோவால் (1564-1642) 1593 இல் இது புனையப்பட்டது. வெப்பநிலையை அளக்கப் பயன் படுவது. இதன் பொது வகைகள்: 1. செண்டிகிரேடு வெப்பநிலை மானி, 2. பாரன் கீட்டு வெப்ப நிலைமாணி, சிறப்பு வகைகள்: 1. மருத்துவ வெப்ப நிலைமாணி 2. பெரும சிறும வெப்பநிலை மானி, பொதுவாக, வெப்பநிலை மானியில் பெருகும் நீர்மம் பாதரசம் (இய)

thermonasty- வெப்ப அமைவு இயக்கம்: திசைச்சாராத் தாவர இயக்கம். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் துலங்கல், எ-டு. குரோகஸ்பூ (உயி)

thermoperiodism - வெப்பக் கால வியம்: சூழ்நிலைக் காரணி களில் இதுவும் ஒன்று. சில தாவரங்கள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. குறைந்த வெப்பநிலை யும் உயர்ந்த வெப்ப நிலையும் மாறி மாறி வருவதற்கேற்ற துலங்கல் இதில் இருக்கும். இத்தகைய தாவரங்கள், குறைந்த இரவு வெப்பநிலைக்கும் உயர்ந்த பகல் வெப்பநிலைக்கும் உட்படுத்