பக்கம்:அறிவியல் அகராதி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bal

42

bar


படும். (இய)

balance, spring - வில் தராசு, வில் சீரை: ஹூக் என்பார் விதியின் அடிப்படையில் அமைந்த கருவி. பனிக்கட்டி முட்டைகள் முதலியவற்றை நிறுக்கப் பயன்படுவது. இதைக் கொண்டு ஒரு பொருளின் ஒப்படர்த்தியையும் காணலாம். (இய)

baianced diet - சமன் செய்த உணவு: சமச்சீர் உணவு. உணவின் பகுதிகள் குறிப்பிட்ட வீதத்தில் அமைந்து தோராயமாக 3000 கலோரி வெப்பத்தைத் தரும் உணவு. (உயி)

ball and socket joint - பந்து கிண்ண மூட்டு: பா. joint (உயி)

ball bearing - குண்டுத் தாங்கி: ஒர் அச்சைச் சுற்றிக் குண்டுகள் நிரம்பிய வளையம் அமைந்தது, சக்கரம் சுழல்வதை எளிதாக்குவது. (இய)

ballistics - எறிஇயல்: வீழியல். எறிபொருள்களின் இயக்கத்தை ஆராயுந்துறை. (இய)

ballistospore - எறிசிதல்: தோன்றுமிடத்திலிருந்து சிதல் வலுவாகத் தூக்கி எறியப்படுதல். இதனால் இது பரந்து பரவ ஏதுவாகிறது. (உயி)

balsam - பால்சம்: ஒட்டக்கூடிய பிசின். எளிதில் ஆவியாகக் கூடிய எண்ணெய். இனிய மணம். ஆய்வகத்திலும் பயன்படுவது. (உயி)

band - 1) அலை வரிசை: வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி. (இய)

band spectrum - பட்டை நிறமாலை வரி நிறமாலை. (இய)

band theory - பட்டைக் கொள்கை: ஆற்றல் பற்றிய கொள்கை. (இய)

bandwidth - 1.அலைவரிசை. 2. அகலம்: குறிப்பிட்ட அதிர் வெண்ணுள்ள வானொலிக் குறிபாடு பரவும் அதிர்வெண் எல்லை. 3. பட்டை. (இய)

bar - பார்: அழுத்த (சி.ஜி.எஸ்) அலகு. 103 பாஸ்கள். மில்லி பார் (100 பா.) வானிலை இயலில் அழுத்தத்தை அளக்கப் பயன்படுவது. (இய)

barb - சுணை: இறகுப்பரப்பிலுள்ள இழை போன்ற பகுதி. பா. wing (உயி)

barbitone - பார்பிடோன்: C8H12N2O3 பார்பிடூரிகக் காடியிலிருந்து பெறப்படும் வெண்னிறப் படிகம். இதன் சோடியம் உப்பு மயக்க மருந்து. (வேதி)

barbituric acid - பார்பிடுரிகக் காடி: C4H4N2O3. மலோனிகக் காடி, யூரியா ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வெண்னிறப் படிகத்துள். தணிப்பு மருந்துகளின் ஊற்றுவாய்.