பக்கம்:அறிவியல் அகராதி.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ton

439

tor


எனப்படும். வீச்சு அதிகமானால் ஒலி அதிகமாகும். குறைந்தால் ஒலி குறையும். நேர் வீதப்போக்குள்ள இந்த ஒலியே உரப்பு எனப்படும். 2. நிலையான நரம்புத் தூண்டுகையினால், தசையின் தொடர்ந்த பகுதிச் சுருக்கமாகும். நம் உடல் நேர்நிலையைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. (ப.து)

tongue-நாக்கு: சுவையுறு உறுப்பு. வாய்க்குழியில் உள்ளது. இதிலுள்ள சுவை அரும்புகள் பல் சுவையை நமக்குத் தெரிவிக்கின்றன. பா. taste buds (உயி)

tonometer - இழுவிசைமானி: 1. ஒலியின் எடுப்பை அளப்பது. 2. விழிக்கோள நீர்ம அழுத்தத்தை அளப்பது 3. ஆவி அழுத்தத்தை அளப்பது. ஆக, ஒரு கருவி பல வேலைகளுக்குப் பயன்படுகிறது. (ப.து.)

tonoplast - பிரிகணிகம்: முன் கணியத்திலிருந்து (புரோட்டோபிளாசம்) நுண்குமிழியைப் பிரிக்கும் படலம். கணிமப் (பிளாஸ்மா) படல அமைப்புடையது. முன்கணியத்திற்கும் நுண்குமிழிச் சாற்றிற்குமிடையே பாலமாக உள்ளது. (உயி)

tool-தொழிற்கருவி: பணிக்கருவி. உளி, திருப்புளி, வாள், வில்லை முடுக்கி முதலியன. ஒ. apparatus, device, instrument (தொழி)

Toricelli vacuum - தாரிசெல்லி வெற்றிடம்: ஆய்வகத்தில் அமைக்குந் தொட்டிப் பளுமானியில், குழாயில் பாதரச மட்டத்திற்கு மேலுள்ள இடைவெளி, காற்று இல்லாததால் தாரிசெல்லி வெற்றிடம் எனப் பெயர் பெறுகிறது. (இய)

torque-முறுக்குவிசை: திருப்புத்திறனை உண்டாக்கும் விசை அல்லது விசைத்தொகுதி. இது சுழற்சியை உண்டாக்கும். (இய)

Torr - டார்: அலகுச்சொல். உயர் வெற்றிடப்புலத்தில் பயன்படும் அழுத்தத்தைக் குறிப்பது. ஆகவே, அழுத்த அலகு. இது 133.322 பாஸ்கல்கள். (இய)

torus - பூத்தளம்: பா. thalamus. (உயி)

torsion - முறுக்கம்: ஒரு முறுக்கு அல்லது இரட்டையினால் உண்டாக்கப்படும் திருகிய உருத்திரிபே முறுக்கமாகும். முறுக்குச் சட்டம் என்பது ஒரு வகைக் கம்பிச்சுருளாகும். இதில் ஒருமுனை நிலையாக இருக்கும். மறுமுனையில் முறுக்குவிசை (டார்க்) அளிக்கப்படும். முறுக்குச் சட்டங்கள் உந்துவண்டிகளின் தொங்கு தொகுதிகளில் பயன் படுகின்றன. கம்பிகளின் இத்தகைய தன்மையைப் பயன்படுத்தி அவற்றின் விறைப்பு எண்ணை (ரிஜடிட்டி மாடுலஸ்) கணக்கிட இயலும். (இய)

torsion balance -முறுக்குத்தராசு: கம்பிகள் முறுக்கமடைதலால் முறுக்குகோணம் உண்டாகிறது. இம்முறுக்கு கோணத்தை ஏற்படுத்தும் சிறிய விசைகளை அளக்க இத்தராசு பயன்படுகிறது.