பக்கம்:அறிவியல் அகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tra

441

tra


யறிதலும் உற்றுநோக்கலும்: வான வெளிக் கலத்தை ஏவுகணையின் இறுதியடுக்கு வரை வழிப்படுத்தலாம். செலவு முழுவதும் வழியறியலாம். இதை வழியறி நிலையங்கள் மேற் கொள்ளும். கலம் இலக்கை அடையும்வரை வானொலியினால் வழியறியலாம். இய)

tranquilizer - அமைதியாக்கி: விழிப்பைப் பழுதுபடுத்தாமலும் சோர்வு ஏற்படுத்தாமலும் கவலையையும் நெருக்கடியையும் குறைக்கும் மருந்து. இது இரு வகைப்படும். 1. பெரு அமைதியாக்கிகள்: உள எதிர்ப்பிகள், நரம்பு நிலைப்பிகள் 2. சிறு அமைதியாக்கிகள்: கவலை நீக்கிகள் எ-டு பென்சோடை யோசிபைன்கள். (மரு)

transcription - பகர்ப்பு: நிறப்புரியிலுள்ள டிஎன்ஏவில் மரபுச் செய்தியுள்ளது. இது தூது ஆர்என்ஏவில் ஒரு தனிப்புரியாக மாற்றப்படுவதே பகர்ப்பு ஆகும். இச்செயல் உயிரணுவின் உட்கருவில் நடைபெறுவது. பா. translation (உயி)

transducer - மாற்றமைப்பி: ஒலி, ஒளி, வெப்பம் முதலிய மின்சாரமில்லாக் குறிபாடுகளை மின்குறிபாடுகளாக மாற்றுங் கருவியமைப்பு (இய)

transduction- மாறிச்செல்லல்: ஒரு குச்சியத்திலிருந்து மற்றொரு குச்சியத்திற்கு நச்சியம் மூலம் மரபுப்பொருள் (டிஎன்ஏ) செல்லுதல். இச்செயல் இயற்கையில் நடைபெறுவதில்லை. மீள்சேர்க்கை டிஎன்ஏ நுட்பத்தில் ஒரு வழிமுறையாகும், பா. genetic engneering (உயி)

transect-தாவர வளையம்: குறிப்பிட்ட பகுதியில் தாவரச் சிறப்பின அமைப்பில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் பகுதி. (உயி)

transfer RNA - மாற்றியமைக்கும் ஆர்என்ஏ: ரிபோசோம்களுக்கு அமினோகாடிகளை எடுத்துச்சென்று தூது ஆர்என்ஏ மூலக்கூறு நெடுக அவற்றை அமையச் செய்யும் ஆர்என்ஏ வடிவம். இங்குப் புரதம் உண்டாக அவை பெப்டைடு பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன. tRNA- மாற்றியமைக்கும். ஆர்.என்.ஏ. mRNA- தூது ஆர்.என்.ஏ. (உயி)

transformer - மின்மாற்றி: எதிர் மின்னோட்ட அழுத்தத்தை, அதிர்வெண் மாற்றமில்லாமல், கூட்டவோ குறைக்கவோ பயன்படுங் கருவி. இதில் முதல்சுருள், துணைச்சுருள் என இருவகைச் சுருள்கள் உண்டு. இச்சுருள்களின் கம்பிகள் வெவ்வேறு தடிமனுள்ளவை. இது ஏற்றமின் மாற்றி (மின்னழுத்தத்தை அதிகமாக் குவது) இறக்க மின் மாற்றி (மின்னழுத்தத்தைக் குறைப்பது) என இருவகைப்படும். இது சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இருக்கும். (இய)

transistor-டிரான்சிஸ்டர், படிகப் பெருக்கி: ஜெர்மானியப் படிகத்