பக்கம்:அறிவியல் அகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tra

443

tri


transmutation - மாற்றுத் தனிமமாக்கல்: அணுக் கருக்களைத் துகள்களால் தகர்ப்பதாலோ கதிரியக்கச் சிதைவினாலோ ஒரு தனிமத்தை மற்றொரு தனிமமாக மாற்றும் முறை. (வேதி)

transparent-ஒளி செல்லக்கூடிய: ஒ. translucent (உயி)

transpiration - நீராவிப் போக்கு: தாவரங்கள் தங்கள் இலைகளிலுள்ள துளைகள் வழியாக வேண்டாத நீரை வெளித்தள்ளலே நீராவிப் போக்காகும். இச்செயல் தாவரத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலையைக் குறைக்கிறது. உறிஞ்சும் விசையாக அமைந்து அதிக நீர் மர உச்சிக்குச் செல்ல உதவுகிறது. மரங்கள் எவ்வளவு உயரம் வளர்த்த போதிலும் அதன் உச்சிக்கும் மற்றப் பகுதிகளுக்கும் நீர் செல்ல முடிகிறது. அதிக அளவு நீரை உறிஞ்சித் தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய நீரைப் பெறுகின்றன. உயிரணுச் சாற்றைச் செறிவடையச் செய்து ஊடுபரவுதலுக்கு உதவுகிறது. பா. translocation. (உயி)

transplantation - 1.பதியஞ் செய்தல்: மாற்றிப் பொருத்தல். திசு அல்லது உறுப்பை ஓர் உயிரியிலிருந்து மற்றொரு உயிரிக்கு மாற்றிப் பொருத்துதல். எ-டு சிறுநீரகத்தை மாற்றிப் பொருத் தல். 2. நடவு: நாற்றைப் பறித்து உழுத வயலில் நடுதல் (உயி)

transponder - தூண்டு துலக்கி: transmitter responder என்பதன் சுருக்கம். மாற்றியமைக்கும் கருவி. வானொலி அல்லது ரேடார் கருவியமைப்பு குறிகையைப் பெற்றுத் தானே அதற்கேற்ற குறிகையை அனுப்புவது செயற்கை நிலாக்களில் அதிகம் பயன்படுவது. (தொ.நு)

transport-போக்குவரத்து: ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு விரைவாகச் செல்ல வழிவகை செய்வது. இது நீர்ப் போக்குவரத்து (கப்பல்கள்), நிலப் போக்குவரத்து (ஊர்திகள்), வானப் போக்குவரத்து (வானூர்திகள்) எனப் பலவகைப்படும். (இய)

transputer-படிகப்பொறி: படிகப்பெருக்கியிலிருந்தும் (டிரான்சிஸ்டர்) கணிப்பொறியிலிருந்தும் இப்பெயர் உருவானது. 1990 வாக்கில் ஐந்தாந் தலைமுறைக் கணிப்பொறிக்காகப் பிரிட்டனில் உருவாகிய ஆற்றல் வாய்ந்த நுண் செயல்முறையாக்கி (மைக்ரோ புராசசர்) (இய)

transuranic elements - மீ அணுவெண் தனிமங்கள்: கதிரியக்க வரிசைத் தனிமங்கள். யுரேனியத்தைக் காட்டிலும் உயர்ந்த அணுவெண்களைக் கொண்டவை. எ-டு நெப்டடூனியம், புளுட்டோனியம். (வேதி)

transverse process- குறுக்கு முள்: முள்எலும்பின் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள மருங்கு நீட்சி. பா. thoracic vertebrae,(உயி)

tribe - குடிஇனம்: நெருங்கிய தொடர்புள்ள பேரினங்கள். பல