பக்கம்:அறிவியல் அகராதி.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

uni

449

ura


பெயர்ச்சி அடைவதற்குச் சீரான இயக்கம் என்று பெயர். இய)

unisexual - ஒருபால் தன்மையுள்ள: ஒரு பாலி, ஒரு சமயம் ஆண் அல்லது பெண் உறுப்புகளை மட்டும் கொண்டது. எ-டு தென்னை. (உயி)

பnit-அலகு: ஒப்பீட்டு அளவு மதிப்பு. அதே அளவின் மற்ற மதிப்புகளைத் தெரிவிக்கப் பயன்படுவது. இது அடிப்படை அலகு, வழி அலகு என இரு வகைப்படும். பா. (இய)

unit cell- அலகுத்தொகுதி: மூலக் கூறுகள், அயனிகள் அல்லது அணுக்கள் அடங்கிய மிகச்சிறிய தொகுதி. ஒழுங்கான இடை வேளைகளில் முப்பருமன்களில் மீண்டும் மீண்டும் நிகழுமாறு செய்ய இது படிகத் தொகுதியின் பின்னலை உண்டாக்கும். ஏழு அடிப்படை அலகுத் தொகுதிகள் உண்டு. இவை ஏழு படிகத் தொகுதிகளை உண்டாக்கும். (வேதி)

unit character -அலகுப் பண்பு: மரபுவழிப் பண்பு. இது கால் வழிக்குச் செல்லும்போது ஒரே அலகாகச் செயற்படுதல், (உயி)

unit processes -அலகுச் செயல்முறைகள்: இவை வேதி மாற்றங்களே. வேதி முறைகளில் நன்கு அறியப்பட்ட படிநிலை களாவன: காய்ச்சி வடித்தல், உப்பீனி ஏற்றம், ஆல்கைலாதல். நைட்ரோ ஏற்றம், வெந்தழல் சிதைவு, தொழிற்சாலை முறையாக்கல், வடிவமைப்புக் கருவிப் பயன்பாடு முதலியவை அலகு முறைகளின் அடிப்படையில் அமைந்தவை. (வேதி),

universal blood substitute - அனைத்துக் குருதிமாற்று: 1992இல் பம்பாய் மருத்துவ அறிவியலாரால் உருவாக்கப் பட்டது. 27-72 மணி நேரத்திற் குள் ஏற்படும் நெருக்கடி நிலை நோயாளிகளுக்கு இது சிறந்த மாற்று. எக்குருதிப் பிரிவின ருக்கும் அளிக்கலாம். குருதிச் சேமிப்பில் வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட அடர் பொருள் நீங்கிய ஈமோகுளோபினிலிருந்து (எஸ்பிஎச்) உருவாக்கப்பட்டது. இதற்கு ஐஐஎச் வினைப்பொருள் என்று பெயர். (மரு)

universal donor -அனைத்து தருநர்: ஒ வகைக் குருதியில் எதிர்ப்பிகள் இல்லாததால், இது ஏனைய மூன்று வகைக்குருதி யோடும் சேரும். ஆகவே, இக் குருதி உள்ளவர் அனைவருக்கும் குருதிக்கொடையளிக்கும் இயல்புடையவர். (மரு),

universe - விண்ணகம்: பொருள், ஆற்றல், இடம் ஆகிய அனைத்தையும் கொண்டது. பொருள் என்பது கதிரவன், கோள் முதலியவை. பரந்தும் விரிந்தும் எல்லையற்றும் உள்ளது. (வானி)

uranium - யுரேனியம்: வெண்ணிறக் கதிரியக்கப் பொருள். தகடாக்கலாம். கம்பியாக்கலாம். உயிர்வளி, வெடிவளி, கரி