பக்கம்:அறிவியல் அகராதி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vac

454

vec


vasa vasorium -குழல்நுண்குழல்: தமனி அல்லது சிரைச் சுவர்களின் நுண்ணிய ஊட்டக் குழாய்கள். (உயி)

vas differens -விரைகுழல்: விரையிலிருந்து (டெஸ்டில்) வெளியே செல்லும் பக்கக்குழாய்களில் ஒன்று. இது எண்ணிக்கையில் இரண்டு. (உயி)

vasectomy -விந்துகுழல் துணுக்கம்: விந்து குழல் ஒவ்வொன்றின் பகுதியை அறுவை மூலம் நீக்குதல். இதனால் விந்து நீரில் விந்தணு சேர்வது தடுக்கப்படுகிறது. புணர்ச்சியின்பொழுது இது கருப்பைக்குச் செல்வதால், கருவுற வாய்ப்பில்லை. இது ஆண்களுக்குரிய குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளுள் முக்கியமானது. (மரு)

vas efferens -விந்து குழலி: இரு சிறுகுழல்கள். விரையின் விந்து குழலை விரை குழலியோடு இணைக்கும் நுண்ணிய குழல். (உயி)

vat dyes - தொட்டிச் சாயங்கள்: கரையாச்சாயங்கள். நீர்த்த காரத்தில் கரையும் வழிப்பொருள்களில் இவை சேர்த்து முதலில் ஒடுக்கப்படும். இந்நிலைமையில் சில இழைகளில் ஏறும் - பருத்தி, கரைசல் சாயந்தோய்க்க வேண்டிய பொருளோடு சேர்க்கப்படும். கரையாச் சாயம் காற்று வெளி உயிர்வளி ஏற்றத்தால் இழைகளில் மீட்பாக்கம் பெறும். (வேதி)

vector - 1. நோய்க்கடத்தி: ஓர் ஓம்புயிரியிலிருந்து மற்றொரு ஓம்புயிருக்குக் குச்சியங்கள், பூஞ்சைகள், நச்சியங்கள் ஆகியவற்றின் நோய்க்கூறுகளைக் கொண்டு செல்லுங் காரணி, 2. திசைச்சாரி: திசை இன்றியமையாததாகவுள்ள அளவு. இது வழக்கமாகக் குறிக்கப்படுவது. ஒரு நேர்க்கோட்டில் திசை, அளவு (எண் மதிப்பு) ஆகிய இரண்டும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். எ-டு இடப்பெயர்ச்சி, திசைச்சாரி (வெக்டார்) அளவு. தொலைவு அளவு சாரி (ஸ்கேலர்) அளவு. கணிப்பொறிக் காட்சித் திரையிலுள்ள வரி, திசை சார்ந்தது, அளவு சார்ந்தது. தவிர எடை, நேர் விரைவு, காந்தப்புலம் முதலியவையும் ஏனைய எடுத்துக்காட்டுகள். (இய)

vector graphics - திசைச்சாரி வரைகலை: கணிப்பொறியின் காட்சித் திரையில் விரைந்து செல்லும் படப்பொழிவுகளை உருவாக்கல், திரைக்குக் குறுக்கே எத்திசையிலும் மின்னணுக் கற்றையை நகர்த்தி இதனைச் செய்ய இயலும். இதற்கென்று தனியாக வடிவமைக்கப்பட்ட எதிர்மின் கதிர்க்குழாய் உள்ளது. பா, graphics (இய)

vector multiplication - திசைச்சாரி பெருக்கல்: இரண்டிற்கு மேற்பட்ட திசைச்சாரிகளைப் பெருக்கல். (இய)