பக்கம்:அறிவியல் அகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ven

456

ver


வட்டங்கள் அல்லது எண்களால் குறிக்கப்பெறும் (கண).

venter - அடி: ஆணியத்தின் பருத்த குடுவை வடிவமுள்ள அடிப்பகுதி. இதில் பெண் பாலணுக்கள் உள்ளன. (உயி)

ventral-வயிற்றுப் புறம்: 1.கீழ்ப்புறம் : மனிதனிடத்து இது மேல் புறம், 2. இலை முதலிய தாவரப்பக்க உறுப்புகளில் மேல் புறம் அல்லது மேற்பரப்பு. ஒ. dorsal, abactinal (உயி).

ventral aorta - வயிற்றுப்புறப் பெருந்தமனி: கருநிலை நாற்கால் விலங்குகளிலும் மீனிலுமுள்ள குருதிக்குழாய். இதயத்தின் முன் முனையிலிருந்து கரி ஈராக்சைடு குருதியைக் கொண்டுவருவது. முதிரி நாற்கால் விலங்குகளில் இது பெருந்தமனியின் ஏறுகிளை யைக் குறிப்பது. (உயி)

ventricle - அறை: இதயத்தின் கீழறை. இது வலக்கீழறை இடக்கீழறை என இருவகைப்படும். குருதியைப் பெருந்தமனிக்கும் நுரையீரல் தமனிக்கும் செலுத்துவது பா, auricle. (உயி).

Venus-வெள்ளி: புவிக்கும் புதனுக் குமிடையே தன் சுற்றுவழியைக் கொண்டுள்ள கோள். அமெரிக்க மெரைனரும் சோயித்து வெனிரா வும் இதனை நன்கு ஆராய்த் துள்ளன. (வானி),

vermiform appendix -குடல்வால்: பா. appendix (உயி)

vernation -இளரிலை அமைவு: உடல் (உறுப்பு) மொட்டில் (வெஜிடேட்டிவ் பட்) இளம் தாவர இலைகள் அமைந்திருக்கும் முறை. இது இலை அமைவிலிருந்து (பில்லோ டேக்சி) வேறுபட்டது. இதில் இலைத்தொகுதி முழுதும் மடிகின்றன. ஆனால், இலை அமைவில் தண்டில் தனி இலை பல கோலங்களில் அமைகின்றன. (உயி)

vernalization -வேனிற்பதனம்: வளர்ச்சிக்குரிய வெப்பநிலை யினை ஆராய்வதால், உண்டா கும் பயன், விதைகளைக் குறைந்த வெப்பநிலையில் வைத்து விதைப் பதாகும். (உயி)

venier - வெர்னியர்: பொருளின் நீளத்தைத் துல்லியமாக அளக்குங்கோல், பிரெஞ்சு நாட்டுக் கணித மேதை பால் வெர்னியரால் அமைக்கப்பட்டது.ஆய்வகங்களில் பயன்படும் அடிப்படை அளவுகருவி. 0.1 செ.மீ. வரை அளக்கலாம். (இய)

versatile -மையம் இணைந்த மகரந்த இழை: மகரந்தப்பையின் மையத்தில் இணைந்திருக்கும். இதனால், மகரந்தப்பை நன்றாகச் சுழல இயலும். ஆகவே, சுழல் மகரந்தப்பை எனப்பெயர் பெறும். புற்களின் பூக்கள். ஒ. basifixed, dorsifixed. (உயி)

vertebra - முள் எலும்பு: முது கெலும்பிலுள்ளது. விலங்கிற்குத் தகுந்தவாறு மாறுபடும். மனித முதுகெலும்பில் 33 முள் எலும்பு கள் உள்ளன. இந்த எலும்பைக்