பக்கம்:அறிவியல் அகராதி.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

voc

460

vol


களில் பெண்ணில் முட்டைகள் நிலைநிறுத்தப்பட்டது. கருவுறுதல் உள்ளேயே நடைபெறுகிறது. கருவுற்ற பின் பெருகிய உயிர், வளர்ச்சியடைந்த விலங்குகளாகவே பிறத்தல். பெரும்பான்மை பாலூட்டிகள் முட்டை வளர்ச்சி (ஓவிபெரஸ்) கொண்டவை. (உயி)

vocal cords -குரல்நாண்கள்: குரல்வளையின் பக்கச் சுவரிலிருந்து விரியும் இரு படல மடிப்புகள். குரல் எடுப்பிற்கு இவையே காரணம்.

volatile oils -ஆவியாகும் எண்ணெய்கள்: வேறு பெயர் பயனுறு எண்ணெய்கள். எளிதில் ஆவியாகும். நல்ல மணம் உடையவை. நீலகிரித் தைலம், கற்பூரத்தைலம். ஒ.non-volatile oils. (வேதி)

volt - ஓல்ட்: அலகுச்சொல். மின்னியக்கு விசையின் வழியலகு ஓர் ஓம் தடைக்கெதிராகச் செலுத்தப்படும் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் அலக்சேண்ட்ரோ ஓல்ட்டா (1745-1827) பெயரால் அமைந்தது. மின்னழுத்தம், மின்னழுத்த வேறுபாடு, மின்னியக்கு விசை ஆகிய மூன்றும் ஒன்றே. வீட்டிற்கு வரும் மின்சாரத்தின் அழுத்தம் 220 ஓல்ட் (இய)

voltaic cell - ஓல்ட்டா மின்கலம்: ஓல்ட்டா அமைத்த மின்கலம். இதில் மின்பகுளி நீர்த்த கந்தகக் காடி நேர்மின்வாய் செம்பு, எதிர் மின்வாய் துத்தநாகம், வேதிவினையால் இதில் மின்சாரம் உண்டாகிறது. இதில் உள்ளிட நிகழ்ச்சி, முனைப்படல் என்னும் இருகுறைகள் உண்டு. இவை முதன்மை மின்கலங்களில் போக் கப்பட்டுள்ளன. (இய)

voltameter -ஓல்ட்டா (மீட்டர்) மானி: வேறுபெயர்கள் கூலு மானி. ஓல்ட் மின் முறிகலம். மின்னாற்பகுப்பு முறையில் மின்னோட்டம் அல்லது மின்னேற்றத்தை உறுதி செய்யப் பயன்படும் கருவியமைப்பு விடுபடும் பொருளின் திறை M ஐக் கொண்டு கண்டறியலாம். இதற்குரிய வாய்பாடு Q=m/z அல்லது I= m/zt (z- வேதி இணைமாற்று t-வெப்பநிலை) (இய),

voltmeter-ஓல்ட்டு(மீட்டர்)மானி: ஒரு மின்சுற்றில் எவையேனும் இரு புள்ளிகளுக்குமிடையே நிலவும் மின்னழுத்த வேறுபாட்டை அளக்குங் கருவி (இய).

volume -1. கனபருமன்: கெட்டிப் பொருளாலும் பாய்மத்தாலும் அடைத்துக் கொள்ளப்படும் இடத்தின் அளவு பருமனாகும். பருமன் = நிறை x அடர்த்தி (v = md) 2. உரப்பு: வானொலி அல்லது தொலைக்காட்சியில் ஒலித்திண்மை. இதைக் கூட்டிக் குறைக்க ஏற்பாடு உண்டு. பா. dimension (இய)

volumeter - பருமமானி: வளியின் பருமனை அளக்கப் பயன்படும் கருவி. (இய)

volumetric analysis -பருமனறி