பக்கம்:அறிவியல் அகராதி.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Wal

462

was


ஆகும். எ-டு. அடியாண்டம் வகை, பாலிபோடிய வகை. (உயி)

Wallace's line - வாலேஸ்கோடு: இந்தோனேசியாவில் பாலி தீவுகளுக்கும் லாம்போக் தீவுகளுக்கும் இடையிலுள்ள கற்பனை எல்லை, ஆஸ்ட்ரேலியத் திணை விலங்குகளையும் கீழ்த் திசை விலங்குகளையும் பிரிப்பது. தார்வின் தம் உயிர் மலர்ச்சிக் கொள்கையை உருவாக்கியதில் உதவியர் வாலேஸ் (1823-1913) என்பவர் வரைந்தது. (உயி)

wall pressure - சுவரழுத்தம்: கண்ணறைப் பொருள்களில் உண்டாக்கப்படும் விசை. இது கண்ணறையின் விறைப்பழுத்தத்திற்குச் (டர்கர் பிரஷர்) சமமாகவும் எதிராகவும் இருக்கும். (உயி)

Walter, Grey - கிரே வால்டர்: பிரிட்டானிய நரம்பியலார், ஒப்புத் தொடர்பியலார். 1950 வாக்கில் எந்திர ஆமைகள் பற்றி ஆராய்ச்சி செய்தவர். கணிப்பொறிக் கட்டுப்பாட்டில் ஆழி (சக்கரம்) பொருந்திய தொலை இயக்கிகளை சேமர்பேப்பர்ட் என்பவர் இயக்கினார். வால்டர் ஆராய்ச்சியை நினைவு கூரவும் சிறப்பிக்கவும் இக்கருவிகளுக்குக் கடலாமைகள் என்று பெயரிட்டார். (தொ.நு)

warm-blooded animals - மாறா வெப்ப நிலை விலங்குகள்: பழைய சொல் நேர்மொழி பெயர்ப்பான வெப்ப இரத்த விலங்குகள். சூழ்நிலைக்கேற்றவாறு மாறாமல், உடல் வெப்ப நிலை ஒரே சீராக இருக்கும் விலங்குகள். எ-டு பறவைகள், பாலூட்டிகள், பா. (உயி)

warning colouration - எச்சரிக்கை நிறம்: எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளச் சில விலங்குகள் தங்கள் உடல் உறுப்புகளில் பெற்றிருக்கும் நிறம், எ-டு. நல்ல பாம்பு, விரியன். பா. camouflage (உயி)

warning odour - எச்சரிக்கை மணம்: 1. எரிவளிகள் பாதுகாப்பிற்காகத் தனித்த மனம் அவற்றிற்கு அளிக்கப்படுதல், அவை தமக்கு என்று மனம் கொண்டவை அல்ல. 2. சில விலங்குகளும் பாதுகாப்பிற்காக இம்மணத்தை வீசுபவை. (பது)

wart - கரட்டு நீட்சி: சிறிய கரடு முரடான புறவளர்ச்சி தோலில் ஏற்படுதல். இந்நீட்சியை தாவரத்தில் காணலாம். (உயி)

washing soda - சலவைச்சோடா: சோடியம் கார்பனேட், பா. sodium carbonate. (வேதி)

wasps - குளவிகள்: பூச்சிகள், முதல் வயிற்றுவளையம் பின் மார்போடு சேர்ந்து முன்காலை (புரோபோடியம்) உண்டாக்குகிறது. ஒளி ஊடுருவக்கூடிய நான்கு சிறகுகள் உண்டு. பின்னிணை சிறியவை. பெண்களுக்குக் கொடுக்குண்டு. பெரும்பான்மை மற்ற பூச்சிகளின் மீது ஒட்டுண்ணிகளாக வாழ்பவை. (உயி)