பக்கம்:அறிவியல் அகராதி.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wat

464

wax


வாட்சனும் (1928 - ) பிரிட்டிஷ் உயிரியல் வேதிய இயலார் பிரான்சிஸ் கிரிக்கும் (1916 - ) 1953இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உறுதிசெய்த மாதிரி. (உயி)

watt - வாட்: W. திறனின் எஸ்.ஐ அலகு. ஒரு வினாடிக்கு ஒரு ஜூல் என அது வரையறுக்கப்பட்டுள்ளது. மின்சாரச் சூழ்நிலையில், ஓர் ஓல்ட் மின்னழுத்த வேறுபாட்டில் ஒரு கடத்தி முனைகள் வைக்கப்படும்போது, அக்கடத்தியின் வழியாகச் செல்லும் ஓர் ஆம்பியர் மின்னோட்டம் ஏற்படுத்தும் ஆற்றல் மாற்ற அளவுக்கு அது இணையானது, ஜேம்ஸ் வாட்டின் (1736 - 1819) பெயரால் அமைந்தது. (இய)

watt hour - வாட் மணி: மின்னளவுகளில் பயன்படுத்தப்படும் ஆற்றல் அலகு. ஒரு மணிக்கு 3600 ஜூல்கள். ஒரு வாட்டு என்னும் அளவில் செலவாகும் ஆற்றலுக்குச் சமம், (இய)

Watt's Govemor - வாட்டின் ஆளி: இக்கருவி நீராவி எந்திரத்தில் அமைந்து, அதன் சுழல் விரைவைக் கட்டுப்படுத்துவது. பொதுவாக, ஆளி என்பது எல்லா எந்திரங்களிலும் அமைந்து, அவற்றின் விரைவை அடக்கி ஆள்வது. (இய)

wattmeter - வாட்டு மானி: மின் சுற்றுத் திறனை நேரடியாக வாட்டுகளில் அளக்கும் கருவி, (இய)

Wave - அலை: ஓர் ஊடகத்தில் ஏற்படும் ஒழுங்கான அலைக் கழிவு. இதன் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு ஆற்றல் மாற்றம் ஏற்படுகிறது.

wave guide - அலைவழிகாட்டி: செறிவொடுங்கலில்லாமல் நுண்ணலை மின்காந்தக் கதிர் வீச்சு செல்லும் உட்குழிவான குழாய். (இய)

wave length - அலைநீளம்: அலையின் ஒரு முழுச்சுற்றின் முனைகளுக்கிடையே உள்ள தொலைவு. இது அலைவு விரைவோடும் அதன் அதிர்வெண்னோடும் தொடர்புடையது. C = v λ, λ - லேம்டா.

Wavemeter - அலைமானி: வானொலி அதிர்வெண் கொண்ட மின்காந்தக் கதிர் வீச்சின் அலைநீளத்தை அளக்குங்கருவி. (இய)

wave number - அலைஎண்: ஓர் அலகு நீளத்தின் ஓர் அலையின் சுற்றுகளின் எண்ணிக்கை (இய)

wave particle duality - அலை-துகள் இருமை: அலைகள் சுமந்து செல்லும் ஆற்றல் அணுவாகவும் துகளாகவும் இருக்கலாம் என்னும் இருநிலைக் கருத்து. (இய)

wave theory - அலைக்கொள்கை: ஒலி அலையாகச் செல்கிறது என்னுங் கொள்கை, (இய)

Wax - மெழுகு: கொழுப்பு வகையைச் சார்ந்தது. கரையாதது. குறைந்த வெப்பநிலையில் உருகு