பக்கம்:அறிவியல் அகராதி.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

wel

466

whi


மின்கலம்: ஒருவகை முதன்மை மின்கலம், திட்ட மின்கலமாகப் பயன்படுவது. 20 °செ. இல் 1.0186 ஓல்ட்டுகள் உள்ள நிலையான மின்னியக்குவிசையை உண்டாக்குவது. (இய)

welding - பற்றவைத்தல்: அதிக வெப்பநிலையில் உலோகத்துண்டுகளை இணைத்தல். இதற்கு மின் வெப்பம் பயன்படுதல், (வேதி)

whale - திமிங்கிலம்: நீரிலுள்ள விலங்குகளில் மிகப்பெரியது. மீன் போன்ற உருஉடையது. மீனன்று. பாலூட்டி. 30-32 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியது. 150 டன் எடையுள்ளது. முன்புறத்துறுப்புகள் நீந்துறுப்புகளாக (பிளிப்பர்ஸ்) மாறியுள்ளன. வழக்கமான உறை இல்லாத தோல், துணைத் தோலில் கொழுப்புண்டு. பார்வைக் கூர்மை இல்லை. மன உணர்வும் நலிந்தது. கூரிய செவியுணர்வு மிக்கது. நீரில் கீச்சிட்டுச் செல்வது. எதிரொலி மூலம் பொருள்களின் இருப்பிடத்தை நுட்பமாக அறிவது. மூச்சுவிட அடிக்கடி நீருக்கு மேல் வருவது. அதிகம் இது வேட்டையாடப்படுகிறது. இருப்பினும், இதனைக் காக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (உயி)

wheatstone bridge - வீட் ஸ்டோன் மின்சுற்று: ஒரு தடையின் மதிப்பை அளக்கப் பயன்படும் மின்சுற்று. (இய)

wheel and axle - உருளையும் அச்சும்: இது ஒரு சுழல்வகை நெம்புகோல்.

எந்திரலாபம் = உருளையின் ஆரம்/இருசின் ஆரம்

பா. winch. (இய)

whispering galleries - மென் குரல் மாடங்கள்: சில கட்டிடங்களில் கீழ்த்தளத்தில் சிறிய ஒலியை எழுப்பினாலும், அதன் எதிர் முனைகளில் அது பெரியதாகக் கேட்கும். நடுவில் இருப்பவர்கள் ஒன்றும் கேட்க இயலாது. முகட்டின் ஒரு பகுதி மறிக்கும் பரப்பாகிறது. ஒலி அலைகள் முக்கிய குவியங்களில் ஒன்று சேர்வதால், இத்தகைய கட்டிடங்கள் தாழ்குரல் பெருக்கு கூடங்கள் எனப் பெயர் பெறுகின்றன. எ-டு உரோம் நகர், தூய யோவான் ஆலயம், இலண்டன் தூயபால் ஆலயம், இந்தியாவில் கோல்கும்பஸ், (இய)

white arsenic - வெண்சவ்வீரம்: As2O3. ஆர்சனிக் மூவாக்சைடு. வெண்ணிறப் படிகம். வீறுள்ள நச்சு. 75% சவ்வீரம் உள்ளது. நச்சுத் தூண்டில்களில் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுவது. (வேதி)

white blood cell - குருதி வெள்ளணு: (உயி)

white lead - வெண்ணீயம்: Pb(OH)2 2PbCO3. காரீய (II) கார்பனேட்டு அய்டிராக்சைடு. மிக முக்கியமான காரகக் காரீய கார்பனேட்டு. மின்னாற் பகுப்பு