பக்கம்:அறிவியல் அகராதி.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

win

468

woo


விளைவுகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய பகுதி. கணிப்பொறியில் காட்சி வெளிப்பாட்டகத்தில் உள்ளது 3. மென்பொருள். (இய)

wind mill - காற்றாலை: இதில் இயக்கு ஆற்றல் காற்று. தகட்டுத் தொகுதியாலான காற்றாடி சுற்றி, இயக்கத்தை அளிக்கும். நீர் இறைக்கப் பயன்ப்டுவது. பா. wind power' (இய)

wind pipe - மூச்சுக்குழல்: தொண்டையிலிருந்து நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றுக் குழாய். இரு கிளைகளாகப் பிரிந்து. ஒவ்வொரு கிளையும் ஒரு நுரையீரலைக் கொண்டிருப்பது. (உயி)

wind power - காற்றாற்றல்: வீசும் காற்றின் ஆற்றல் அதன் திசை விரைவின் மும்மடிக்கு நேர் வீதத்தில் இருக்கும். புவிமேற்பரப்பில் வீசும் காற்றின் மூலம் 10 MW ஆற்றல் விலையின்றிக் கிடைக்கிறது. தகுந்த கருவிகளைக் கொண்டு இவ்வாற்றலை எந்திர ஆற்றலாக்கலாம். இதற்குக் காற்றாடி எந்திரம் பொதுவாகப் பயன்படுவது. நீர் இறைக்கவும், தானியங்களை அரைக்கவும், மின் உற்பத்தி செய்யவும் காற்றாடிகள் பயன்படும். (இய)

winds - காற்றுகள்: வீசக்கூடிய பண்புடையவை. இவை வாணிபக் காற்றுகள் மேற்குக் காற்றுகள், முனைக்காற்றுகள், நிலக்காற்றுகள். கடல்காற்றுகள் எனப் பல்வகைப்படும். அரித்தல், கடத்தல், படியவைத்தல் ஆகிய மூன்றும் இவற்றின் வேலைகள். (பு.அறி)

wings - சிறகுகள்: தட்டையான படல அமைப்புகள், பறவைகள் பறக்க உதவுதல். பறவைகளின் முன்புறத் துறுப்புகள் சிறகுகளாகியுள்ளன. ஏனைய முதுகெலும்புகளின் முன்புறத்துறுப்புகளோடு தோற்ற ஒற்றுமை கொண்டவை. பூச்சிகளின் முன்புறத்துறுப்புகள் வேலை ஒற்றுமை உடையவை. (உயி)

Wollaston prism - வாலஸ்டைன் முப்பட்டகம்: இது முனைப்படு விளைவு கொண்ட கண்ணாடி. தலமுனைப்படு ஒளியைப் பெறப் பயன்படுதல். (இய)

womb - கருப்பை: பா. uterus. (உயி)

wood - கட்டை: குறிப்பாக மரங்களில் காணப்படும் கடின நரம்பமைப்பு. இரண்டாம் மரவியத்திலிருந்து சைலம், உண்டாவது. இரண்டாம் நிலை வளர்ச்சியுள்ள தாவரங்களில் மட்டுமே காணப்படும். எ-டு இருவிதையிலைத் தாவரங்கள். இதன் வகைகளாவன. 1. சாற்றுக் கட்டை சேப் உட்): இதில் மட்டுமே நீரும் ஊட்டப் பொருள்களும், கடத்தப்பெறும். இது இளங்கட்டை 2. வயிரக் கட்டை (ஹார்ட் உட்): பல பருவ வளர்ச்சியால் உண்டாவது. வேலை ஒன்றும் இல்லாதது. வாணிபச் சிறப்புடையது. மற்றும்