பக்கம்:அறிவியல் அகராதி.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xer

472

xyl


பதியஞ் செய்தல்: நல்ல நிலையிலுள்ள ஒருவரது உறுப்பை பழுதுபட்ட உறுப்பு உள்ள ஒருவருக்கு மாற்றீடு செய்வது. இது வழக்கத்திலுள்ளது. (மரு).

Xerox உலர்நகலி: எழுத்துவடிவச் செய்தியை நகல் எடுக்கும் கருவி. நகலாக்கி (இய)

x-radiation - கதிர்வீச்சு: ஊடுருவும் மின்காந்தக் கதிர்வீச்சு, புற ஊதாக் கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் காமா கதிர்வீச்சு அதிர்வெண்களுக்கும் இடைப்பட்டது. (இய)

x-ray - எக்ஸ் (ரே) கதிர்: வேறு பெயர் இராண்டஜன் கதிர்கள். 1895இல் இராண்டஜன் (1845-1923), என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக் குறுகிய அலைநீளமுடையது. ஒளிக்கதிர் புகாப் பொருள்களிலும் ஊடுருவுவது. உடலில் தசையில் ஊடுருவி எலும்புகளைக் கருமையாகப் படத்தில் காட்டவல்லது. அதாவது, எலும்பில் ஊடுருவாது. (இய)

x-ray astronomy- எக்ஸ் கதிர் வானியல்: புவிக்காற்று வெளியிலுள்ள எக்ஸ் கதிர்மூலங்களை ஏவுகணைகள் விண்குமிழிகள் வாயிலாகவும் அதற்கு அப்பாலுள்ளவற்றைச் செயற்கை நிலாக்கள் மூலமும் ஆராய்தல், 1962இல் நடைபெற்ற ஏவுகணைப் பறப்பில் முதல் கதிரவன் சாரா எக்ஸ் கதிர்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து இப்புதுத்துறை உருவாகி வளர்ந்த வண்ணம் உள்ளது. (வானி),

x-ray crystallography -எக்ஸ் கதிர் படிக வரைவியல்: படிகங்கள் மூலம் எக்ஸ் கதிர் விளிம்பு விளைவைப் பயன்படுத்துதல். படிக மூலக்கூறுகளின் அணுக்களின் முப்பரும அமைப்பை அறிய இது பயன்படுகிறது. படிகத்தின் வழியே எக்ஸ் கதிர்கள் செல்லும்பொழுது, விளிம்பு விளைவுக் கோலம் எக்ஸ் கதிர்களாகக் கிடைக்கும். இவை அணுக்களால் விளிம்பு விளைவை அடைகின்றன. விளிம்பு விளைவுக் கீற்றணியினால் ஒளி விளிம்பு விளைவு அடைவது போல இந்நுணுக்கம் பெரிய முலக்கூறுகளான டிஎன்ஏ, ஆர்என்ஏ முதலிய மூலக்கூறுகளின் அமைப்பை உறுதி செய்யப் பெரிதும் உதவுதல் (இய)

x-ray diffraction -எக்ஸ் கதிர் விளிம்பு விளைவு: பா. x-ray crystallography (இய).

x-ray sources -எக்ஸ் கதிர் மூலங்கள்: எக்ஸ் கதிர் தலை வாய்கள். கதிரவன் குடும்பத்திற்குப் புறத்தே உள்ள எக்ஸ் கதிர்வீச்சு மூலங்கள். விண்மீன் கூட்டத்தில் 100க்கு மேற்பட்ட மூலங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. (வானி)

xylem - சைலம், மரவியம்: மரத்திசு. குழாய்த்திசு ஊட்டத்தைக் கடத்துவதும் தாவர உடலுக்குத் தாங்குதல் அளிப்பதும் முதன்