பக்கம்:அறிவியல் அகராதி.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

zee

475

zie


பெயர் வட்டக் காட்சியில் பயன்படுவது விலங்ககத்தில், காட்சிப் பொருள்.

Zeeman effect -சீமன்(எஃபெக்ட்) விளைவு: நிலைக்காந்தப் புலத்தில் மூலக்கூறுகள் அல்லது அணுக்களால் உமிழப்படும் கதிர்வீச்சிலுள்ள நிறமாலை வரிகள் பிரிக்கப்படுதலுக்குச் சீமன் விளைவு என்று பெயர். இது 1896இல் சீமனால் (1865-1943) கண்டுபிடிக்கப்பட்டது. இது இருவகைப்படும். 1. இயல்பான சீமன் விளைவு: இதில் காந்தப் புலம் ஒளிப்பாதைக்குச் செங்குத்தாக இருக்கும். ஒரு தனி வரி மூன்று வரிகளாகப் பிரியும், ஒரு போக்காக இருந்தால் இரண்டாகப் பிரியும். 2. இயல்பற்ற சீமன் விளைவு: இதில் வரிகள் சிக்கலாகப் பிரிக்கப்படுவதாகும்.சிப்ப எந்திரவியல் அல்லது விசைப்பொறி இயல் இவ்விளைவை மின்னணுச் சுழற்சிமூலம் விளக்குகிறது. (இய)

Zeeman energy -சீமன் (எனர்ஜி) ஆற்றல்: பயன்படுகாந்தப்புலத்திற்கும் மூலக்கூறு காந்தப்புலத்திற்குமிடையே ஏற்படும் வினையினால் உண்டாகும் ஆற்றல். (இய)

zeolite - சியோலைட்: நீரேற்றிய அலுமினோ சிலிகேட் தொகுதியில் ஒன்று. இயற்கையாகக் கிடைப்பது. சர்க்கரையைத் தூய்மைபடுத்தவும் கடினநீரை மென்னீராக்கவும் பயன்படுதல். பா.Permutit(வேதி)

zero - சுழி, இன்மை: எந்த அளவாக இருந்தாலும் அதன் தொடக்கம். இதன் சிறப்பு இந்திய வானநூலாரும் கணக்கியல் அறிஞருமான ஆரியப்பட்டாவினால் (476-520) சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இவரைப் பெருமைப்படுத்தும் வகையில், இந்தியா தான் ஏவிய முதல் செயற்கை நிலாவிற்கு ஆரியபட்டா என்று பெயரிட்டது. இது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் சோவியத்து ஒன்றியத்திலிருந்து ஏவப்பட்டது. (வானி)

zero gravity -சுழி ஈர்ப்பு: எடையின்மை. இதில் ஈர்ப்பு அல்லது எந்திர விசையின் முடுக்கத்தை அறிய இயலாது. தவிர இது வானவெளிப் பயணிகளால் உணரப்படும் நிலையுமாகும்.பா. weightlessness. (இய)

Zero order-சுழிவரிசை: இது ஒரு வேதிவினை. இதில் வினைவீதம் வினைபடு பொருளின் செறிவைப் பொறுத்ததன்று. (வேதி)

zero point energy - சூழ்நிலை ஆற்றல்: ஒரு பொருளின் மூலக்கூறுகள் அல்லது அணுக்கள் 4° செ இல் பெற்றிருக்கும் ஆற்றல். (வேதி)

Ziegler process -சீக்ளர் முறை: உயரடர்த்தி பாலியீத்தின் தயாரிக்கும் தொழிற்சாலை முறை. வினையூக்கிகள்: டிட்டினியம் (w) குளோரைடு அலு