பக்கம்:அறிவியல் அகராதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bea

46

ben


தெற்கு. 270° மேற்கு. (இய)

bearings - தாங்கிகள்: எந்திரப்பகுதிகள் (இய)

beats - விம்மல்கள்: ஒலியலைகள் அல்லது மற்ற அலைகளின் செறிவில் ஒழுங்காக ஏற்படும் ஏற்ற இறக்கம். (இய)

Beckmann thermometer - பெக்மன் வெப்பநிலை மானி: வெப்பநிலை வேறுபாடுகளை அளக்க உதவும் வெப்பநிலை மானி. (இய)

bees wax - தேன் மெழுகு: C30H61O. COC15H31. பல சேர்மங்கள் சேர்ந்தது, மஞ்சள் நிறம். தன் கூட்டைக் கட்டத் தேனியால் சுரக்கப்படுவது. மெழுகுப் பொருள்கள், மருந்துகள், ஒப்பனைப் பொருட்கள் முதலியவை செய்யப் பயன்படுவது. (உயி)

beetroot sugar - பீட்கிழங்குச் சர்க்கரை: பீட்கிழங்கிலிருந்து கிடைக்கும் சர்க்கரை. மேல்நாடுகளில் தயார் செய்யப்படுவது. (உயி)

behaviour - நடத்தை ஓர் உயிரியின் பல திறப்பட்ட செயல்களைக் குறிப்பது. இதில் உடற்செயல்களும் உளச்செயல்களும் அடங்கும். தூண்டலுக்கேற்ற துலங்கல் இதில் உண்டாகிறது. (உயி)

behavioural genetics - நடத்தை மரபணுவியல்: உயிரி நடத்தை பற்றி ஆராயும் மரபணுவியலின் ஒர் வகை. பா. genetics. (உயி)

bel - பெல்: ஆற்றல்மட்ட அடிப்படை அலகு. 10 டெசிபெல்கள். (இய)

bell metal - மணி வெண்கலம்: ஒரு வகை வெண்கலம் மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது. (வேதி)

Benedicts's solution - பெனிடிக்ட் கரைசல்: சோடியம் சிட்ரேட் சோடியம் கார்பனேட் செம்பு (II) சல்பேட்டு ஆகிய மூன்றும் சேர்ந்த கலவை. ஒடுங்கு சர்க்கரைக் கரைசலை ஆய்ந்து பார்க்கப் பயன்படுவது. (வேதி)

benthos -ஆழிட வாழ்விகள்: ஏரி அல்லது கடலடியில் வாழும் தாவரத் தொகுதிகளும் விலங்குத் தொகுதிகளுமாகும். எ-டு. இயக்கமற்ற விலங்குகள் தவழ்ந்தும் வளை தோண்டியும் வாழ்பவை. (உயி)

benzaldehyde - பென்சால்டிகைடு: C4H5CHO. வாதுமை மணங்கொண்ட மஞ்சள் நிற கரிம எண்ணெய். உணவுக்குச் சுவை சேர்க்கவும் சாயங்கள், உயிர் எதிர்ப்புப் பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுவது. (வேதி)

benzene - பென்சீன் C6H4: மணமுள்ள அய்டிரோகார்பன். 1825 இல் பாரடேயினால் கண்டு பிடிக்கப்பட்டது. இதை, நிலக்கரித் தாரைச் சிதைத்து வடித்துப் பெறலாம். கொழுப்பைக் கரைக்கவும், உலர்சலவை செய்யவும் பயன்படுவது. (வேதி)