பக்கம்:அறிவியல் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ben

47

bet


benzoin - பென்சாயின்: ஜாவா மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின். பிரயர் பால்சம். மூச்சுக் கட்டை நீக்கப் பயன்படுவது. 2. பென்சால்டிகைடைப் பொட்டாசியம் சயனைடுக் கரைசலுடன் சேர்த்துக் காய்ச்சும் பொழுது பென்சாயின் உண்டாகும். (வேதி)

beri-ber - பெரி பெரி: வைட்டமின் பி1 குறைவினால் ஏற்படும் நோய். (உயி)

berkelium - பெர்க்கிலியம்: Bk. கதிரியக்கத் தனிமம். புவியில் இயற்கையாகக் கிடைப்பதில்லை. இதிலிருந்து பல ஒரிமங்கள் தொகுக்கப்படுகின்றன. (வேதி)

Bernoulli exclusion principle - பர்னவுலி தவிர்ப்பு நெறிமுறை: நிலையாகவும் சுழற்சி இல்லாமலும் ஒரு நீர்மம் பாயும் பொழுது, அதன் வழியிலுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் அதன் மொத்த ஆற்றல் மாறாதது. (இய)

Bernoulli theorem - பர்னவுலி தேற்றம்: இயக்கத்திலுள்ள ஒரு நீர்மம் இயக்க ஆற்றல், நிலை ஆற்றல், அழுத்த ஆற்றல் ஆகிய முன்றையும் பெற்றுள்ளது. (இய)

berry - சாற்றுக்கனி: சிறிய வட்ட வடிவக்கனி, புறவுறையில் சாறு நிரம்பியிருக்கும். பல வகைகளைக் கொண்டது. தக்காளிப் பழம். பா. bacca. (உயி)

berryllium - பெரிலியம்: Be. இலேசான உலோகம். ஆனால் சற்றுக் கடினமானது. அதிக நச்சுத் தன்மை கொண்டது. உலோகக் கலவைகளில் பயன்படுவது. (வேதி)

Berzelius hypothesis - பெர்சிலியஸ் கருதுகோள்: ஒரே வெப்ப அழுத்த நிலைகளில் பருமனளவுள்ள எல்லா வளிகளும் சம எண்ணிக்கையுள்ள அணுக்களைக் கொண்டிருக்கும். வளிகளின் பருமனளவுகளுக்கும் உள்ள உரிய தொடர்பை இக்கருதுகோள் கூறுகிறது. (இய)

Bessemer process - பெசிமர் முறை: எஃகு தயாரிக்கும் முறை (வேதி)

beta decay - பீட்டா சிதைவு: பீட்டாதுகள் வெளிப்படுத்தும் கதிரியக்கச் சிதைவு. (இய)

beta factor - பீட்டா காரணி: கணிம இயற்பியலில் (பிளாஸ்மா பிசிக்சிஸ்) காந்த அழுத்தத்திற்கும் கணிம இயக்க அழுத்தத்திற்கும் உள்ள வீதமாகும். கணிமம் (பிளாஸ்மா) என்பது பொருளின் நான்காம் நிலை, அதிக வெப்ப நிலையுள்ளது. (இய)

beta iron - பீட்டா இரும்பு: தூய இரும்பின் புற வேற்றுரு. ஆல்பா இரும்பு போன்றது. ஆனால் காந்தம் இல்லாதது. (வேதி)

beta rays - பீட்டா கதிர்கள்: அதிக ஊடுருவு ஆற்றலுள்ள பீட்டா துகள்களின் சுழற்சியாகும். (இய)

betatron - பீட்டா விரைவாக்கி: நிலையான சுற்று வழியில் இயங்கும் விரைவாக்கி. மின்