பக்கம்:அறிவியல் அகராதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bev

48

bil


னணுக் கற்றையைக் கொண்டு, உயராற்றல் துகள்களைப் பெறுங் கருவி. (இய)

bevel edge - சரிவு விளிம்பு. (இய)

beverages - குடி நீர்மங்கள்: பானங்கள். பருகுவதற்குத் தகுதியுள்ளவை. தேநீர், பால் முதலியவை இயற்கைப் பானங்கள். கோக்கோகோலா முதலியவை செயற்கைப் பானங்கள். (உயி)

Bhaskara - பாஸ்கரா: இந்தியப் புவி உற்று நோக்கு நிலா. ஒ. Aryabhatta. (இய)

BHC - பி.எச்.சி, பென்சின் அறு குளோரைடு: C6H4Cl4 உருவ மற்ற சாம்பல் நிறக் கெட்டிப் பொருள், பூஞ்சையின் மணம், ஆற்றல் மிக்க பூச்சிக் கொல்லி. (வேதி)

Bial's reagent - பாயல் வினையாக்கி: 10% இரும்பு (lll) குளோரைடும், அடர் அய்டிரோகுளோரிகக் காடியும், ஆர்சினாலும் சேர்ந்த கலவை. பெண்டோஸ் சர்க்கரையை ஆய்ந்தறியப் பயன்படுவது. இச்சர்க்கரைகளை இவ்வினையாக்கியுடன் சேர்த்துக் கொதிக்க பச்சை நிறம் உண்டாகும். (இய)

biceps - இரு தலைத்தசை: இது ஒர் இயக்குத் தசை. இரு நாண் இருப்பதால் இருதலைத்தசை, இது சுருங்கும் பொழுது முன்கை மடங்குகிறது. ஆகவே, இது மடக்கு தசை. பா. triceps. (உயி)

biconcave - இருபுறமும் குழிந்து: இரு புறக் குழிவில்லை.

bicuspid valve - ஈரிதழ் திறப்பி: பா. mitral valve. (உயி)

biennials - இருபருவப் பயிர்கள்: தம் வாழ்க்கைச் சுற்று இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும் தாவரங்கள், முதலாண்டு பூத்தலும் இரண்டாமாண்டு கனியளித்தலும் நடைபெறும். எ-டு. வெங்காயம், முள்ளங்கி. (உயி)

big bang theory - பெரு வெடிப்புக் கொள்கை: மீ அடர்த்திக் கொள்கை. விண்னகத் தோற்றக் கொள்கைகளில் ஒன்று. விண்ணகத்திலுள்ள எல்லாப் பொருட்களும் ஆற்றலும் மீயடர்த்தியுமுள்ள ஒரு திரட்சி வெடித்ததிலிருந்து தோன்றின என்று கூறுவது. அவ்வாறு வெடித்தது மிகப் பழங்காலத்தில் குறிப்பிட்ட நேரத்திலாகும். இக் கொள்கை முதன் முதலில் 1927இல் ஏ.ஜி.ஈ. லெமாய்டர் (1894-1966) என்பவரால் உருவாக்கப்பட்டது. 1946இல் ஜார்ஜ் கேமோ (1904-1968) என்பவரால் திருத்தியமைக்கப்பட்டது. பா. steady state theory. (வானி)

bilateral symmetry - இருபக்கச் சமச்சீர்: ஒர் உயிரியின் உடற் பகுதிகளின் சீரமைப்பு. இதில் இடப்பாதிகளும் வலப்பாதிகளும் ஒன்று மற்றொன்றின் ஆடித் தோற்றங்களாக இருக்கும். அதாவது, ஒரு செங்குத்துக் கோட்டில் மட்டுமே உடற்பகுதிகளை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. மீன், புலி நகக்கொன்றை. பா. symmetry. (உயி)