பக்கம்:அறிவியல் அகராதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bio

50

bio


குடும்பத்தின் இரு பெரும் பிரிவுகளாகிய ஆஸ்டிராய்டி சிக்கோரியய்டி ஆகிய இரண்டும் பிரிக்கப்பட்டிருத்தல். பா. taxonomy ஒ. numerical taxonomy. (உயி)

biocide - உயிர்க் கொல்லி: தீங்குதருந் தாவரம். விலங்கு முதலியவற்றைக் கொல்லும் வேதிப் பொருள். இதில் பூஞ்சைக் கொல்லி, பூச்சிக் கொல்லி முதலியவை அடங்கும். (உயி)

biocoenosis - தாவர விலங்குக் கூட்டம்: தாவரங்களும், விலங்குகளும் அடங்கிய தொகுதி. (உயி)

biocontrol agents - உயிர்க் கட்டுப்பாட்டுக் காரணிகள்: இவை வெட்டுக்கிளி, பறவை, தவளை முதலியவை. குழ்நிலைத்தகவும் சிக்கனமுடையதுமான நெல்பண்ணையை உருவாக்க உதவுபவை. (இய)

biodiversity- உயிரி வேற்றுமை: பல வேறுபாடுகளைக் கொண்ட உயிரிகள் இயற்கைச் சமநிலை குலையாது வாழ்தல். (உயி)

bioelectronics - உயிரிமின்னணுவியல்: மின்னணுக் கருவியமைப்புகளை உடலில் பதியவைத்து மக்கள் நல்வாழ்விற்கு உதவுவதை ஆராயுந்துறை. பா. bionics. (உயி)

bioengineering - உயரிப் பொறியியல்: குறையுள்ள அல்லது நீக்கப்பட்ட உடல் உறுப்புகளை ஈடு செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்கப்படும் கருவிகளை ஆராயுத்துறை. எ-டு. செயற்கை உறுப்புகள். கேட்க உதவுங் கருவிகள். (உயி)

biogas - உயிரியவளி: சாண எரிவளி. சாணத்தை நொதிக்கச் செய்யும் பொழுது தோன்றும் வளி, அதிக அளவு மீத்தேன் சிறிதளவு ஈத்தேன் அடங்கியது சிறந்த எரிபொருள். (வேதி)

biogenesis - உயிர்த்தோற்றம்: இது ஒரு திண்ணிய கொள்கை. உயிர்ப் பொருள்களிலிருந்தே உயிரிகள் உண்டாக இயலும் என்பது இதில் வற்புறுத்தப்படுகிறது. ஒ. abiogenesis. (உயி)

biogeograpny - புவி உயிர்ப்பரவியல்: இவ்வுலகில் தாவரங்களும் விலங்குகளும் பரவி இருப்பதை ஆராயுந்துறை (உயி)

biological clock - உயிரிக் கடிகாரம்: பல பருவச் சுழற்சிகளையும் பகற்செயல் ஒழுங்குகளையும் ஒரே சீராக்கும் உயிரியல் உள்விசை நுட்பம். (உயி)

biological control - உயிரியல் கட்டுப்பாடு: வேதிப் பொருள்களைத் தவிர்த்து இரையாக்கிகளைக் கொண்டு தொற்றுயிர்களைக் கட்டுப்படுத்தல். எ-டு. மீன்களால் கொசுக்களை அழித்தல். பம்புகளால் எலிகளைக் கொல்லுதல். (உயி)

biological harbingers - உயிரியல் முன்னறிவிப்பிகள்: நிலநடுக்கம் முதலிய இயற்கைக் கேடுகளை முன்கூட்டி அறிவித்து அவ்விடத்தை விட்டு அகலும் விலங்குகள். எ-டு. எலி, பாம்பு.