பக்கம்:அறிவியல் அகராதி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bli

55

blu


blind spot - குருட்டுப் புள்ளி: விழித்திரையில் பார்வை நரம்பு துழையும் புள்ளி. இப்புள்ளிக்கு ஒளியுணர்வு இல்லை. பா. eye. (உயி)

blister - கொப்புளம்: பா. boils.(உயி)

blood - குருதி: மனித உடலில் ஒடும் நீர்மம். உணவுப்பொருட்கள், மூச்சு வளிகள், வளர் ஊக்கிகள் ஆகியவற்றை ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வது. (உயி)

blood clotting - குருதி உறைதல்: குருதி இழுது போன்ற பொருளாதல். குருதி காற்றில் பட்டுத் தெளியமாகவும் சிவப்பணுக்களும் வெள்ளணுக்களும் சூழ்ந்த பைபிரின் இழைகளாகவும் பிரியும் நிகழ்ச்சி. திராம்பின், பைபிரிஜோன், கால்சிய உப்புகள் ஆகியவை இக்கட்டை உண்டாக்கும் காரணிகள். (வேதி)

blood film - குருதிப் படலம்: குருதியின் இயைபை ஆராய, அதைக் கண்ணாடி வில்லையில் படலமாக எடுத்துச் சாயமேற்றி துண்ணோக்கியில் பார்த்தல். (உயி)

blood groups - குருதி வகைகள்: குருதிகளில் காணப்படும் எதிர்ப்பிகள் (ஆண்டிஜன்ஸ்) அடிப்படையிலும், தெளியத்திலுள்ள எதிர்ப்புப் பொருள்கள் அடிப்படையிலும் குருதி வகைப்படுத்தப்படுகிறது. அவ்வகையில் நான்கு பிரிவுகள் உள்ளன. ஏ, பி, ஏபி, ஒ. 1990இல் இக்கருத்தை கூறியவர் லேண்ட் ஸ்டெயினர். (உயி)

blood pressure - குருதியழுத்தம்: முதன்மையான தமனிச் சுவர்களில் குருதியினால் உண்டாக்கப்படும் விசை. இஃது இயல்பானவரிடத்து 120க்கும் 80க்கும் இடையே இருக்கும். குருதியழுத்தமானியால் இது மருத்துவரால் அளக்கப்படுவது. (உயி)

bloom - மலர்ச்சியுறுதல்: ஒரு சிறப்பின எண்ணிக்கையில் பார்க்கக்கூடிய அளவுக்கு உயர்வு ஏற்படுதல். எ-டு. பாசிச் சிறப்பினம். (உயி)

blow pipe - ஊதுகுழாய்: வளியும் காற்றும் சேர்ந்த கலவை. அழுத்தத்தில் இக்குழாயிலிருந்து வெளியேற்றப்படுவதால் தீச்சுடர் உண்டாக்கப்படுதல். ஊது விளக்கு என்றும் கூறலாம். (வேதி)

blue print - நீல அச்சுப்படம்: நீல வரைபடம். இரும்பு பிரஷியேட் தாளில் ஒளிப்பட முறையில் நீலப் பின்னணியில் வெள்ளைக் கோடுகள் வரையப்படும் படம். கட்டிடம் முதலியவற்றின் அமைப்பைக் காட்டும் திட்டப்படம். (தொ.நு)

blue vitriol - மயில் துத்தம்; CuSO45H2O. படிக வடிவ செம்பகச் சல்பேட், பூஞ்சைக் கொல்லிகளில் நச்சுப்பகுதி. செம்பு முலாம் பூசப் பயன்படுவது. (வேதி)